Kilambakkam Railway Station: 'ஹேப்பி நியூஸ்' கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ..! ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்..!
kilambakkam Railway Station: சுமார் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த ரயில் நிலையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
![Kilambakkam Railway Station: 'ஹேப்பி நியூஸ்' கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ..! ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்..! kilambakkam new railway station All you need to know is where it is located and how much its budget is Kilambakkam Railway Station: 'ஹேப்பி நியூஸ்' கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ..! ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/11/4abd470e98c51824db2fc517fb7231051691712266334113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயம்பேடு பேருந்து நிலையம்
சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ( Kilambakkam ) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.
ஆனால் நிலம் கையகப்படுத்துதல், தொல்பொருள் பகுதி என்பதால் எழுந்த சிக்கல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம், முதன்மை பீடத்தில் வேலைகள் முடிவடையாதது என இழுபறியாய் சென்று கொண்டு, இருந்தது.தற்பொழுது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து பணிகளை குறித்து நேரடியாக கண்காணித்து பணிகளை முடிக்க துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் அவப்போவது, துறை அதிகாரிகளும் அமைச்சர்களும், தொடர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை வேகப்படுத்தினர். இப்பொழுது பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. விரைவில் பேருந்து முனையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தகட்ட திட்டம் தான் என்ன ?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை படிப்படியாக இரண்டிலிருந்து, மூன்று கட்டங்களாக இயக்குவதற்கான திட்டங்களை அரசு சார்பில் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி, செல்வதற்கு வசதியாக அயன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சிவேகே. சாலை முதல் ஊரப்பாக்கம் வரையிலும், , புது சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், முடிச்சூர் பகுதியில் புதியதாக ஆம்னி பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் ரயில் நிலையம்:
கிளாம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை, ரயில்வே நிர்வாகம் ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் இதற்கான ஒப்புதல் வழங்கி உள்ளார். இத்திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில், சுமார் 40 லட்ச ரூபாய் ரயில்வே நிலையத் துறைக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி வண்டலூருக்கும், ஊரப்பாக்கத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த ரயில்வே நிலையம் அமைய உள்ளது. இதனால் சென்னையில் பிற பகுதியில் வசிக்கும், பொதுமக்களும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, எளிதில் வந்தடைய முடியும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)