மேலும் அறிய

ஊட்டி செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோடை சிறப்பு மலை ரயில் சேவை மார்ச் 27 முதல் தொடக்கம்!

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் இயக்கப்படும் கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை வரும் மார்ச் 27-ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் இந்த சுற்றுலா தளத்தில் பல்வேறு இடங்களை பார்த்து ரசிக்க இந்தியா முழுவதும் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள். வசதிக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

ஊட்டி செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோடை சிறப்பு மலை ரயில் சேவை மார்ச் 27 முதல் தொடக்கம்!

இந்த ரயிலில் பயணம் செய்யும்போது மலையின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகமானோர் இயற்கையின் அழகை ரசிப்பர். உள்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடு சுற்றுலா பயணிகளும் இந்த ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த மலை ரயில், பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது பள்ளி, கல்லூரிகளில் இறுதி தேர்வு நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில வாரங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மலை ரயிலில் செல்ல வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் டிக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். டிக்கெட் கிடைக்காத சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள்.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்க சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மாாச் 27-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 5-ந்தேதி வரை வெள்ளி மற்றும், ஞாயிறுக்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 2.25 மணிக்கு ஊட்டி சென்றடைகிறது.

ஊட்டி செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோடை சிறப்பு மலை ரயில் சேவை மார்ச் 27 முதல் தொடக்கம்!

அதேபோல் மார்ச் 28-ந்தேதி முதல் ஜூலை மாதம் 6-ந்தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு. இந்த கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Embed widget