Olympic : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை; வலுக்கும் எதிர்ப்புகள்

நியூசிலாந்து சார்பில் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க , பளுத்தூக்குதல் பிரிவில்  தற்போது லாரல் ஹப்பார்ட் பரிந்துரைக்கப்படிருக்கிறார். ஆனால் இது குறித்த முழுமையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு அவர் போட்டியில் கலந்துக்கொண்டால் அவர்  பெண்களுடன் போட்டியிடுவார். அதற்கு தற்போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

FOLLOW US:

"அங்கீகாரம் "என்ற ஒற்றை மகுடத்தை நோக்கிதுதான் மனித பயணம் . இதில் திருநங்கைகள் போன்ற மாற்று பாலினத்தோர் தங்களுக்கான இடங்களை பெறுவதற்கு சற்று கூடுதலாக முயற்சிக்க வேண்டியிருக்கிறது. அப்படி தனது திறமையால்  உலகில் முதன் முறையாக லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard ) என்ற  திருநங்கை ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்.

யார் இந்த லாரல் ஹப்பார்ட்?

லாரல் ஹப்பார்ட் நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்டவர்.  43 வயதாகும் லாரல்  பளுத்தூக்குதல் பிரிவில் பல சர்வேதேச போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். கடந்த  2019 ஆம் ஆண்டு சமோவில் நடைப்பெற்ற பசுபிக் போட்டிகளில் கலந்துக்கொண்டு தங்கம் வென்றார். அதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு  பாரிஸின் ரோம் நகரில் நடைப்பெற்ற  பளுத்தூக்குதல் போட்டியில், 87 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொண்டு தங்கம் வென்று , உலகக்கோப்பையை கைப்பற்றினார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில்  லாரல் ஹப்பார்ட் பங்கேற்பதற்கான வாய்ப்பினை பெற்றிருந்தும் , உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் பங்கேற்க முடியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஓசி ஆல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் , தற்போது அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு வரையில் லாரல் ஹப்பார்ட் ஆண்கள் பிரிவின் பளுத்தூக்கு போட்டிகளில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

வலுக்கும் எதிர்ப்புகள்!

நியுசிலாந்து சார்பில் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க , பளுத்தூக்குதல் பிரிவில்  தற்போது லாரல் ஹப்பார்ட் பரிந்துரைக்கப்படிருக்கிறார். ஆனால் இது குறித்த முழுமையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு அவர் போட்டியில் கலந்துக்கொண்டால் அவர்  பெண்களுடன் போட்டியிடுவார். அதற்கு தற்போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Here's Laurel Hubbard, aged over 40, taking gold in the women's weightlifting at the Pacific Games in 2019, knocking two teenaged Samoan women - some of the world's strongest females - down to 2nd and 3rd place. Look at their faces and tell me this is fair https://t.co/yCFfb0ugrK
— Helen Joyce (@HJoyceGender) May 6, 2021

" லாரல் போட்டியில் பங்கேற்றால் அது மற்ற பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் ", "அவர் என்னதான் பெண்ணாக இருந்தாலும், உடல் வலிமையில் அவர் ஆண்" என பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. மேலும் டொனால் ட்ரப்பின் மகன் டொனால் ஜான் ட்ரம்ப்  , எதிர்ப்பு வாக்குகளுக்கான கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ளார்.

If you think this is ridiculous and want to help save women’s sports sign this petition. https://t.co/YxyQQHlBK2

Trans weightlifter Laurel Hubbard set to make history at Tokyo Olympics | Tokyo Olympic Games 2020 | The Guardian https://t.co/BHxMwvcsPf
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) May 6, 2021

இது பிரபல கார்டியன் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள லாரல் ஹப்பார்ட் " பத்து வருடங்களுக்கு முன்பு என்னை போன்றவர்களை ஏற்றுக்கொள்ள விளையாட்டு உலகம் தயாராக இல்லை, ஆனால் தற்போது எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேடையில் என்ன நிரூபிக்க இதுதான் சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து பாலின வேற்றுமைகள் இன்றி அனைத்து மக்களையும்  ஊக்குவிக்கும் நாடு, இந்நிலையில் உலகின் முதல் திருநங்கையை அந்நாடு ஒலிம்பிக்கில் களம் இறக்க முடிவு செய்திருப்பதை சிலர் எதிர்த்தாலும் சிலர் அதனை வரவேற்கவே செய்கின்றனர்.  இருந்தாலும் அரசின் நிலைப்பாடு எதிர்புகளுக்கு செவிக்கொடுக்குமா இல்லை லாரல் ஹெப்ரடை ஊக்குவிக்குமா என்பதை  பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: Olympic The first transgender transgender Olympics

தொடர்புடைய செய்திகள்

EngW vs IndW Test: கேப்டன் நைட் அரைசதம்: வலுவான நிலையில் இங்கி., மகளிர் அணி !

EngW vs IndW Test: கேப்டன் நைட் அரைசதம்: வலுவான நிலையில் இங்கி., மகளிர் அணி !

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!