மேலும் அறிய

Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை

Iran vs Israel War: ஈரான் உச்ச தலைவர் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், கொடூரமாக பழிவாங்குவோம் என அந்நாடு எச்சரித்துள்ளது. அதற்கு ட்ரம்ப்பும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கைகள் விடுத்துவந்த நிலையில், நேற்று முதல் அந்த தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், அந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ள செய்தி இன்று காலை வெளியனது. இதைத் தொடர்நது, ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், ட்ரம்ப்பும் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளா. அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கொல்லப்பட்ட உச்ச தலைவர் - எச்சரிக்கை விடுத்த ஈரான்

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறி, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நேற்று ஈரான் மீதான தாக்குதலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடங்கின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வந் நிலையில், தனது அலுவலகத்தில் இருந்து படைகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளார்.

தொடக்கத்தில் இதை ஈரான் மறுத்த நிலையில், பின்னர் அந்நாட்டு அரசு ஊடகம் உள்ளிட்ட ஊடகங்கள் கமேனியின் மரணத்தை உறுதி செய்தன. தாக்குதலில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச தலைவர் கமேனியின் படுகொலை மாபெரும் குற்றம் என்றும், பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தாங்கள் கொடுக்கப் போகும் பதிலடி, இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது.

ட்ரம்ப் பதில் எச்சரிக்கை

இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஈரானுக்கு பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் இன்று மிக கடுமையாக தாக்கப் போவதாக கூறியது. பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும். அவர்கள் அதை செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால், இதுவரை அவர்கள் சந்தித்திராத அளவில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்“ என்று கூறியுள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Embed widget