மேலும் அறிய

Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கி வரும் நிலையில், ஈரான் வளைகுடா நாடுகள், குறிப்பாக துபாயை குறி வைத்து தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு காரணம் என்ன.? பார்ப்போம்.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று திடீரென தாக்குதல்களை தொடங்கின. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வந்த நிலையில், இன்று ஈரான் உச்ச தலைவர் கமேனியும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரான் வளைகுடா நாடுகளை, அதிலும் குறிப்பாக துபாயை குறி வைத்து தாக்கதல் நடத்தி வருகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா இஸ்ரேல் படைகள்

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளையும் விடுத்து வந்தார். மறுபுறம், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனிடையே, நேற்று திடீரென ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை தொடங்கின. ஈரானின் முக்கிய நிலைகள் மீது குண்டு மழை பொழியப்பட்ட நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இல்லமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அதில், அயதுல்லா அலி கமேனி, அவரது மகள், மருமகன், பேரக் குழந்தை உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கமேனி கொல்லப்பட்டதை ட்ரம்ப் தனது பதிவின் மூலம் அறிவித்தார். ஆனால் ஈரான் முதலில் அதை மறுத்த நிலையில், தற்போது அந்நாட்டு அரசு ஊடகம் உள்ளிட்ட ஊடகங்கள் கமேனியின் மரணம் குறித்த செய்திகளை வெளியிட்டதால் பரபரபான சூழல் ஏற்பட்டுள்ளது.

துபாயை குறி வைத்த ஈரான் - காரணம் என்ன.?

இந்த பரபரப்புகளுக்கு இடையே, நேற்று முதல் ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. அதில், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றம் சவுதி அரேவியாவில் தாக்குதல்களை நடத்தி உள்ளது. குறிப்பாக, இந்த தாக்குதல்களில் துபாய் முக்கிய டார்கெட்டாக இருந்துள்ளது.

ஈரானின் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆசிய நாட்டைச்  சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், புர்ஜ் கலிஃபாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள்  பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், மற்றொரு முக்கிய சர்வதேச புகழ்பெற்ற ஹோட்டலான துபாயின் பேர்மாண்ட் தி பாம் ஜுமேராவிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்கு பெரும் தீ பற்றி எரியும் நிலையில், இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

துபாய், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்குகிறது. செல்வ வளம் மிக்க அந்த நகரம், மேற்குலக நாடுகளுக்கு போட்டியாக உள்ளது. சுற்றுலா, தொழில், வர்த்தகம், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் துபாய் முன்னிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் துபாயில் அலுவலகங்களை வைத்துள்ளன.

இந்த அளவிற்கு பெருமைகளை கொண்ட நகரான துபாயை தாக்கினால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கான அழுத்தங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் தான், துபாய் டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

எனினும், தற்போது கமேனி கொல்லப்பட்டுள்ளதால், ஈரான் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget