மேலும் அறிய

IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்

IND Vs WI ICC T20 Worldcup: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில், இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IND Vs WI ICC T20 Worldcup: இந்தியா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் மோதும் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

அரையிறுதி டிக்கெட் யாருக்கு?

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. க்ரூப் 2 பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. நேற்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தாலும், மோசமான ரன்ரேட் காரணமாக பாகிஸ்தான் தனது அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மறுமுனையில் க்ரூப் 1 பிரிவிலிருந்து தென்னாப்ரிக்கா அணி தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் கடைசியாக அரையிறுதிக்கு முன்னேறப்போகும் நான்காவது அணி யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடைபெற உள்ள்து. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு தகுதி பெற உள்ளது. 

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் பலப்பரீட்சை:

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு, இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இரு அணிகளும் இதுவரை சூப்பர் 8 சுற்றில் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன.  ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் இருந்தாலும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி கொண்டுள்ளது. 

இந்திய அணியின் பலம், பலவீனம்..

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே பேட்டிங் யூனிட்டிலேயே உள்ளது. ஒட்டுமொத்த தொடரில் சென்னை போட்டியிலேயே, ஓரளவிற்கு சுமாரான தொடக்கத்தை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி கண்டது. அபிஷேக் அந்த ஒரு போட்டியில் மட்டுமே அதிரடியாக ரன் குவித்தார். சஞ்சு சாம்சன் வேகமாக ரன் குவித்தாலும், நிலைத்து நின்று ஆட வேண்டிய அவசியம் உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த வீரரான பாண்ட்யா இன்னும் பொறுப்புடன் செயல்பட்டால் அணி சரியான சமநிலையை எட்டக்கூடும். ஆல்ரவுண்டர்களான துணைகேப்டன் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டர் சுந்தரை பயன்படுத்துவதில் உள்ள குழப்பத்தை தீர்த்தால், வலுவான ப்லேயிங் லெவனை கட்டமைக்க கூடும். பந்துவீச்சு யூனிட்டி சூழலுக்கு ஏற்ப சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், மிகவும் ஆழமான மற்றும் அதிரடியான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று இந்திய அணியின்பவுலிங் தரத்தை சோதிக்க தயாராக உள்ளது.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் ரன் ரேட்
தென்னாப்ரிக்கா 2 2 0 4 2.890
மேற்கிந்திய தீவுகள் 2 1 1 2 1.791
இந்தியா 2 1 1 0 -0.10
ஜிம்பாப்வே 2 0 2 0 -4.475

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்: நேருக்கு நேர்

சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 19 போட்டிகளிலும், மேற்கிந்தீய தீவுகள் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

ஈடன் கார்டன் மைதானம் எப்படி?

நடப்பு உலகக் கோப்பையிலேயே இரண்டு முறை 200-க்கும் அதிகமான ரன்கள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளம் அதிகப்படியான ரன்களை குவிக்க தாராளமாக வாய்ப்புகளை வழங்குகிறது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், பனிப்பொழ்விற்கும் வாய்ப்பு இருப்பதால், சேஸிங் செய்யும் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால், இன்றைய போட்டியில் எந்த குறுக்கீடும் இருக்காது.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

மேற்கிந்திய தீவுகள் : சாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டு, குடகேஷ் மோதி, ஷமர் ஜோசப்

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி எங்கு நடைபெறுகிறது?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி எப்போது தொடங்குகிறது?

போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஸ்டார் செயலியில் காணலாம்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு என்ன வாய்ப்பு?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே பேட்டிங் யூனிட்டிலேயே உள்ளது. பேட்டிங் வீரர்களின் நிலைத்து ஆடும் திறன் முக்கியம்.

ஈடன் கார்டன் மைதானத்தின் தன்மைகள் என்ன?

ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது, அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு சேஸிங் அணிக்கு சாதகமாக அமையலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் அணியில் பாக் வீரர்! நாங்க தலையிடமாட்டோம்.. காவ்யாவுக்கு சப்போர்ட் செய்த பிசிசிஐ
Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் அணியில் பாக் வீரர்! நாங்க தலையிடமாட்டோம்.. காவ்யாவுக்கு சப்போர்ட் செய்த பிசிசிஐ
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget