Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Tamil Thalaivas PKL: புரோ கபடி லீகில் தொடர் தோல்விகளை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி, எப்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
![Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Pro Kabaddi League will the Tamil Thalaivas team recover from Series of defeat? Fans expect Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/1fbf16ccdf57b3998c3db3d84850be3e1703390238054732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tamil Thalaivas PKL: புரோ கபடி லீகில் நேற்றைய லிக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஜெய்ப்பூர் பாந்தர்ஸிடம் தோல்வ்யுற்றது.
புரோ கபடி லீக்:
மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 10 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தம் 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. லீகின் நான்காவது வாரமான தற்போது சென்னைய்ல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது ரச்கர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தடுத்து தோல்வி:
உள்ளூரில் இதுவரை தமிழ் தலைவாஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதன்படி, முதல் போட்டியில் பாட்னா அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூர் அணியிடம் வெறும் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இது உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் நீடிக்கிறது.
மீண்டு வருமா தமிழ் தலைவாஸ்?
தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் நாளை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராகவும், வரும் 27ம் தேதியன்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் களமிறங்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வென்று உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்துமா? தொடர் தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா என தமிழ் தலைவாஸ் அணி மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அணியின் முக்கிய பிரச்னை:
ரெய்டு வரும் வீரர்களை பிடித்து ஆட்டமிழக்கச் செய்து டேக்கில் புள்ளிகளை பெறுவதில், தமிழ் தலைவாஸ் அணி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியிலும், தமிழ் தலைவாஸ் அணி தலா 9 டேக்கில் புள்ளிகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்னைகளை சரி செய்து நாளைய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தமிழ் தலைவாஸ் வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அணி விவரம்:
அஜிங்க்யா பவார், நரேந்தர், செல்வமணி கே, விஷால் சாஹல், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நிதின் சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லக்ஷனன், எம் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர், ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அமீர்ஹோசைன் பஸ்தாமி, ரோன், முகமதுரேசா கபௌத்ரஹங்கி, மற்றும் ரித்திக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)