Pro Kabaddi 2024 : தொடர்ந்து சறுக்கும் தமிழ் தலைவாஸ்.. யு மும்பாவிடம் போராடி தோல்வி
Pro Kabaddi : யு மும்பா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி
புரோ கபடி லீக்கின் 54வது லீக் போட்டியில் யு மும்பா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி.
புரோ கபடி லீக்கின் பதினோராவது சீசன் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. முதல் கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது.
சறுக்கும் தமிழ் தலைவாஸ்:
இந்த சீசனை அதிரடியாக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி முதல் ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதன் பிறகு ஆடிய மூன்று போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் நேற்று யு மும்பா அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதியது.
மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வழக்கம் போல் தங்கள் தடுப்பாட்டத்தில் சொதப்பினர், இவர்கள் தான் சொதப்பினார்கள் என்று பார்த்தால் ரைய்டர்களும் இந்த போட்டியில் சொதப்பினர். மறுமனையில் யு மும்பா அணி புள்ளிகளை குவித்துக் கொண்டே இருந்தது. முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-23 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தது.
அதிரடி காட்டிய ஈரான் வீரர்:
இரண்டாம் பாதியில் ஈரான் வீரர் மொயின் சஃபாகி அதிரடி காட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு புள்ளிகளை குவித்து தள்ளினார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன சச்சின் தன்வார் இந்த போட்டியில் தனது முதல் புள்ளியை எடுக்க 24 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது தமிழ் தலைவாஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது, ஆனால் எவ்வளவு போராடியும் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஆடிய மோசமான ஆட்டத்தால் இந்த போட்டியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி மூலம் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10 இடத்துக்கு தள்ளப்பட்டது.
भाजीत भाजी मेथीची, विजयी #UMumba आमच्या प्रीतीची 💪🧡#ProKabaddi #PKL11 #ProKabaddiOnStar #LetsKabaddi #TamilThalaivas pic.twitter.com/lK2L6DDKeV
— ProKabaddi (@ProKabaddi) November 14, 2024
யுபி யோதாஸ் வெற்றி :
இதற்கு முன்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 40-34 என்கிற கணக்கில் யுபி யோதாஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் யுபி யோதாஸ் அணி 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.