Paris Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரருக்கு தடை.. ரசிகர்கள் அதிர்ச்சி
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறிய இந்திய வீரர்:
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
12 மாதங்களில் பிரமோத் பகத்தின் ஊக்க மருந்து சோதனை மூன்று முறை தோல்வி அடைந்த நிலையில், அவர் ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதை கடந்த மார்ச் 1ஆம் தேதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் 1ஆம் தேதி ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது.
18 மாதங்கள் தடை:
இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்து உள்ளது. இதனால் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தொடங்கும் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பிரமோத் பகத் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பிரமோத் பகத் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தவர் அதேபோல் 2013 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றவர் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: சத்தியம் கேட்ட மனு பார்க்கரின் தாய்! உறுதி கொடுத்த நீரஜ் - திருமணம் குறித்த அப்டேட்டா?