இதுபோன்ற அசாத்திய திறமையை நான் பார்த்ததே இல்லை: இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஸ்வீடன் செஸ் வீராங்கனை
செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க வந்துள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற செஸ் வீராங்கனை அன்னா க்ராம்ளிங், இந்திய செஸ் வீரர்கள், வீராங்கனகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க வந்துள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற செஸ் வீராங்கனை அன்னா க்ராம்ளிங், இந்திய செஸ் வீரர்கள், வீராங்கனகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க நாள் முதலே இந்தியர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க வந்துள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற செஸ் வீராங்கனை அன்னா க்ராம்ளிங், இந்திய செஸ் வீரர்கள், வீராங்கனகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
View this post on Instagram
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியா மிகவும் வலிமையாக உள்ளது. அறிமுக பிரிவில் இந்தியர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு வீரருமே 2600 புள்ளிகள் என்றளவில் மதிப்பிடப்படுகின்றனர். இதுபோன்ற அதிசயத்தை நான் பார்த்ததே இல்லை. இதை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அன்னா அடிப்படையில் ஒரு டிஜிட்டல் கன்டன்ட் க்ரியேட்டர் என்பது கூடுதல் தகவல். கடைசியாக அவர் பகிர்ந்த இன்ஸ்டா போட்டோ ஒரு செஸ் அரங்கில் எடுக்கப்பட்டதாகவே உள்ளது.
நடப்பு செஸ் ஒலிம்பியாடில் மகளிர் பிரிவில் முதல் 10 இடங்களில் 1.பிரான்ஸ் 2.அஜார்பைஜன் 3.அர்மெனியா 4.ஸ்பெயின் 5.மங்கோலியா 6.பெரூ 7.இந்தோனேஷியா 8.கோலம்பியா 9.ஸ்வீடன் 10.பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
பிரமாண்டமாக துவங்கிய ஒலிம்பியாட்:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேற்று (ஜூலை.28) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து விழாவை தொடக்கி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என்ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தத் தொடக்கவிழா கலை நிகழ்ச்சிகளையும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ’வணக்கம் சென்னை செஸ்’ பாடலையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.