வெளியானது ஐசிசி தரவரிசை பட்டியல் - ஆதிக்கம் செலுத்தும் சுழற்பந்து வீச்சாளர்கள்..
ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்து அணியின் டிம் சவுதி இடம்பெற்றுள்ளார்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசையை ஐசிசி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 - ல் 9 பேர் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்து அணியின் டிம் சவுதி இடம்பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் கூட தரவரிசை பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக நியூசிலாந்தை சேர்ந்த மூன்று பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் சவுதியை தவிர சாண்ட்னர், சோதி என மற்ற இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள்.
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சாம்பா, ஆஸ்டன் அகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் ஷம்சி அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக சண்டகன் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் 4-வது இடத்தில் உள்ளார். ஆப்கான் அணியை சேர்ந்த ரஷீத்கான் முஜீப்-உர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.