KKR vs SRH, IPL 2023 Live: ரிங்குசிங், நிதிஷ்ராணா அதிரடி வீண்..! சன்ரைசர்ஸ் அபார வெற்றி..!
KKR vs SRH Match: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதரபாத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரங்களை பார்க்கலாம். முந்தைய போட்டிகளின் முடிவின்படி, ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடர்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராணா தலைமையிலான முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு தொடங்க உள்ளது.
நேருக்கு நேர்:
இதுவரை இரண்டு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 முறையும், ஐதராபாத் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
முந்தைய வரலாறு:
கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 209
ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 187
கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 115
ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 101
இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் - புவனேஷ்வர் (22)
இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக ரன் அடித்தவர் - டேவிட் வார்னர் (619)
மைதானம் எப்படி?
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியும், ஹை-ஸ்கோரிங் கேமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 79 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், 47 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. முதலாவதாக பேட்டிங் செய்த அணிகள் 32 முறை தான் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் 75 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 46 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள்:
கொல்கத்தா: குர்பாஸ், ரிங்கு சிங், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்
ஐதராபாத்: திரிபாதி, மார்க்ரம், மார்கண்டே, அபிஷேக் சர்மா
கொல்கத்தா உத்தேச அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ஐதராபாத் உத்தேச அணி:
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேட்ச்), ஹென்ரிச் கிளாசென் (வி.கே), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்
நிதிஷ்ராணா, ரிங்குசிங் அதிரடி வீண்..! சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி..!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி போராடி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிரட்டும் நிதிஷ்ராணா - ரிங்குசிங்..! வெற்றி பெறுமா கொல்கத்தா..?
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடி வரும் ரிங்குசிங்- நிதிஷ்ராணாவால் 16 ஓவர்களில் 152 ரன்களை கொல்கத்தா எட்டியுள்ளது.
6 ஓவர்களில் 60 ரன்கள்..! அதிரடியில் மிரட்டும் நிதிஷ்ராணா - ஜெகதீசன்..!
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் நிதிஷ்ராணா 6வது ஓவரிலே 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால், கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 60 ரன்களை எட்டியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா...!
229 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் குர்பாஸ் டக் அவுட்டாகியும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும், சுனில் நரைன் டக் அவுட்டாகியும் வெளியேறியதால் கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இமாலய இலக்கை வைத்த சன்ரைசர்ஸ்
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை குவித்துள்ளது.