மேலும் அறிய

DC Vs SRH Match Highlights: நடராஜன் அசத்தல் பந்து வீச்சு; டெல்லியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் சீசன் 17:

ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 35 வது லீக் போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதிரடியாக தொடங்கிய சன்ரைசர்ஸ்:

 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார்கள். இருவரின் ஆட்டமும் டெல்லியை மிரட்டியது. ட்ராவிஸ் ஹெட் இன்றைய போட்டியிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். அந்த வகையில் அதிவேக அரைசதம் அடித்த அணி, அதிவேக சதம் அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றது.  வெறும் 16 பந்துகளிலேயே ஹைதராபாத் அணி 52 ரன்களை கடந்தது. 


மறுபுறம் 16 பந்துகளில் தன்னுடைய ஐ.பி.எல் அரைசதத்தை பதிவு செய்தார் ட்ராவிஸ் ஹெட். அந்த வகையில் 16 பந்துகளில்  7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மார்க்கரம் மற்றும் கிளாசென் ஆகியோரும் விக்கெட்டுகளை பறிகொடுக்க அப்போதில் இருந்து ரன்வேட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தது டெல்லி அணி. மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற ட்ராவிஸ் ஹெட் 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 89 ரன்களை குவித்தார். 

267 ரன்கள் இலக்கு:

பின்னர் வந்த நிதிஷ் குமார் மற்றும் சக்பாஷ் அகமது இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதில் சக்பாஷ் அகமது அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்கள் எடுத்தது. பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினார்கள். இதில் பிரித்வி ஷா 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

 அசத்தல் வெற்றி:

அடுத்த சில நிமிடங்களில் டேவிட் வார்னர் 1 ரன்னில் நடையைக் கட்டினார்.  அடுத்ததாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி டெல்லி அணிக்கு மளமளவென ரன்களை சேர்த்துக்கொடுத்தது. 3 வது விக்கெட்டுக்கு 109 ரன்களை குவித்து இருந்தது டெல்லி. இதனிடையே வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார்  ஃப்ரேசர்-மெக்குர்க். மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்களை குவித்தார். அதேபோல், அபிஷேக் போரலும் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 42 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார்கள்.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்:

இதில் ஸ்டப்ஸ் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்ததாக வந்த லலித் யாதவும் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க பேட்டிங்கில் திணறியது டெல்லி அணி. இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை  வீழ்த்தி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget