FIFA WORLDCUP 2022: திருவிழாவில் கலக்கவிருக்கும் ஒன் அண்ட் ஒன்லி டாப் 10 கோல் கீப்பர்ஸ்?
FIFA WORLDCUP 2022: 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் கலக்கவுள்ள கோல் கீப்பர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்னும் இரண்டே நாட்களில் தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
32 அணிகளில் உள்ள டாப் 10 கோல் கீப்பர்ஸ் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
10. கில்லர்மோ ஓச்சோவா, மெக்சிகோ:
முப்பத்தேழு வயதான கில்லர்மோ ஓச்சோவா தனது ஐந்தாவது உலகக் கோப்பையை விளையாடவுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்த மூத்த கீப்பர் இதற்கு முன்பு ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில் ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளார்.
9. உனை சைமன், ஸ்பெயின்:
மூன்று கோல் கீப்பருடன் களம் இறங்கும் ஸ்பெயின் அணிக்கு வழு சேர்ப்பவராக சைமன் உள்ளார். சைமன் ஸ்பெயினுக்காக 27 போட்டிகளில் விளையாடி 12 கிளீன் ஷீட்களை தடுத்துள்ளார்.
8. எட்வார்ட் மெண்டி, செனகல்:
செனகல் கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பையில் போட்டியிடும் வலிமையான ஆபிரிக்க நாடு மற்றும் அவர்களின் வலிமையின் தூண்களில் ஒன்று மெண்டி. இவரது துல்லியமான ஆட்டத்தால் 2021ஆம் ஆண்டிற்கான செனகல் நாட்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
7. ஹ்யூகோ லொரிஸ், பிரான்ஸ்:
லொரிஸ் 2008 இல் பிரெஞ்சு சீனியர் அணிக்காக அறிமுகமானார் மற்றும் அதன் பின்னர் 139 போட்டிகளில் விளையாடியுள்ளார். கோல் கீப்பராக மட்டும் இல்லாமல் அணியையும் வழிநடத்தும் கேப்டனாகவும் லொரிஸ் செயல்படவுள்ளார்.
6. யான் சோமர், சுவிட்சர்லாந்து:
யூரோ 2020 விருதைப் பெற்றுள்ள இவர், ஐந்து போட்டிகளில் 21 கோல்களை தடு. 33 வயதான கோல் கீப்பர் சுவிட்சர்லாந்திற்காக 76 போட்டிகளில் விளையாடி 30 கிளீன் ஷீட்களை வைத்துள்ளார்.
5. எமிலியானோ மார்டினெஸ், அர்ஜென்டினா:
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி அணிக்கு ஒரு பலம் என்றால் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அணிக்கு இன்னொரு பலம். கோப்பையை வெல்லும் அணிகளில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணி மிகவும் பலமாக உள்ளதற்கு கோல் கீப்பர் முக்கிய காரணம்.
4. ஜோர்டான் பிக்ஃபோர்ட், இங்கிலாந்து:
உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள மூன்று கோல்கீப்பர்கள் ஜோர்டான் பிக்போர்ட், நிக் போப் மற்றும் ஆரோன் ராம்ஸ்டேல். அதில் அணிக்கு பலம் சேர்ப்பவராக ஜோர்டன் உள்ளார்.
3. திபாட் கோர்டோயிஸ், பெல்ஜியம்:
பெல்ஜியம் அணியின் தூண் என்று தான் திபாட் கோர்டோயிஸைச் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்த உலகக் கோப்பையில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் கோல் கீப்பர்களில் திபாட் நிச்சயம் இருப்பார்.
2. மானுவல் நியூயர், ஜெர்மனி:
36 வயதான மானுவல் நியூயர் 2014லில் ஜெர்மனி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும் அந்த ஆண்டு கோல்டன் ஷூவையும் வென்றார். அணியின் கேப்டனாகவும் உள்ள இவர் விளையாடும் கடைசி உலகக் கோப்பையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. அலிசன், பிரேசில்:
பிரேசில் அணியின் கோல் கீப்பராக உள்ள அலிசன். ஒட்டு மொத்தமாக களம் இறங்கும் 32 அணிகளில் தலை சிறந்த கோல் கீப்பராக உள்ளார். இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகளில் முன்னிலை வகிக்கும் பிரேசிலுக்கு அலிசன் முக்கிய துருப்புச் சீட்டாக உள்ளார்.