Yashasvi Jaiswal: இன்னும் 132 ரன்கள் தான் - அஜிங்க்யா ரஹானேவின் சாதனையை உடைப்பாரா யஜஸ்வி ஜெய்ஸ்வால்? நாளை என்ன நடக்கும்
அஜிங்க்யா ரஹானேவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனையை முறியடிக்க யஜஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 132 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அஜிங்க்யா ரஹானேவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனையை முறியடிக்க யஜஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 132 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்:
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - வங்கதேச டெஸ்ட் நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ளது. அந்தவகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற வங்தேச அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு அங்கமாக இருப்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. அதேபோல், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைக்கும் சுழலும் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோஹித் ஷர்மாவும், சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 27,000 ரன்களை எடுக்கும் முனைப்பில் விராட் கோலியும் களம் காண உள்ளனர்.
ரஹானேவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இந்நிலையில் அஜிங்க்யா ரஹானேவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனையை முறியடிக்க உள்ளார் யஜஸ்வி ஜெய்ஸ்வால். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 712 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இச்சூழலில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பதிப்பில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த அஜிங்க்யா ரஹானேவின் சாதனையை முறையடிக்கும் முனைப்பில் ஜெய்ஸ்வால் களம் இறங்க உள்ளார். இந்த சாதனையை செய்வதற்கு அவருக்கு 132 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
WTC இன் ஒரு பதிப்பில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்:
- ரோஹித் சர்மா – 1094 (2019-21)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 1028 (2023-25)
- விராட் கோலி – 934 (2019-21)
- விராட் கோலி – 932 (2021-23)
- சேதேஷ்வர் புஜாரா – 928 (2021-23)
- ரிஷப் பண்ட் – 868 (2021-23)
- மயங்க் அகர்வால் – 857 (2019-21)
- சேதேஷ்வர் புஜாரா – 841 (2019-21)
சர்வதேச அளவில் WTC இன் ஒரு பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:
- ஜோ ரூட் (இங்கிலாந்து) – 1915 (2021-23)
- மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா) – 1675 (2019-21)
- ஜோ ரூட் (இங்கிலாந்து) – 1660 (2019-21)
- உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா) – 1621 (2021-23)
- மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா) – 1576 (2021-23)
மேலும் படிக்க: IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா
மேலும் படிக்க: Virat Kohli Record:சூடாகும் இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் - ராகுல் டிராவிட்டின் 'பிளேயர் ஆஃப் மேட்ச்' சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?