Virat Kohli Record:சூடாகும் இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் - ராகுல் டிராவிட்டின் 'பிளேயர் ஆஃப் மேட்ச்' சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் ராகுல் டிராவிட்டின்,'பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிராக நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ள டெஸ்டில் ராகுல் டிராவிட்டின்,'பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம் தொடர்:
அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த போட்டி நாளை (செப்டம்பர் 19) ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் ரன் மிஷன் விராட் கோலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார் விராட் கோலி. இதனிடையே விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி விளையாடவில்லை.
ராகுல் டிராவிட்டின் 'பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை முறியடிப்பாரா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளாருமான ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். விராட் கோலி 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை இந்த விருதை பெற்றுள்ளார். நாளை தொடங்க உள்ள இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடரின் போது டிராவிட்டின் சாதனையை சமன் செய்யவும் அதை முறியடிக்கவும் விராட் கோலிக்கு வாய்ப்பு இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 27,000 ரன்கள்:
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 591 இன்னிங்ஸ்களில் 26,942 ரன்கள் எடுத்துள்ளார். அந்த வகையில் நாளை தொடங்க உள்ள டெஸ்ட் தொடரில் அவர் 58 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ்களுக்கு கீழ் 27,000 சர்வதேச ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெறுவார் கோலி. 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டிய மற்ற வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் - கே.எல்.ராகுல் களம் இறங்குவாரா? ரோஹித் ஷர்மா நச் பதில்
மேலும் படிக்க: IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா