SL vs IRE: ஒரே இன்னிங்சில் 700 ரன்கள்... அதிக முறை குவித்து அசத்திய இலங்கை..! இந்தியாவின் நிலை என்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 700 ரன்களுக்கு மேல் 7வது முறையாக குவித்து இலங்கை அணி அசத்தியுள்ளது.
கருணரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு எதிராக அயர்லாந்து அணி ஆடி வருகிறது. பால்ப்ரைன் தலைமையிலான அயர்லாந்து அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் தற்போது ஆடி வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் 704 ரன்களை குவித்தது. மதுஷ்கா, குசல் மெண்டிஸ் இரட்டை சதமும், கருணரத்னே சதமும் விளாசினர்.
அதிக முறை 700 ரன்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமை கொண்ட இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிக முறை 700க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற பெருமையையும் தன் வசமே வைத்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக 700 ரன்களை எட்டியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 700 ரன்களுக்கும் மேல் விளாசிய அணி என்ற பெருமையையும் தன்வசமாக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 7வது முறை ஆகும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்த சாதனையை இலங்கை படைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 2வது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 4 முறை 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
ஆஸ்திரேலிய அணியும் 4 முறை 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது, வெஸ்ட் இண்டீஸ் அணியும் 4 முறையும் 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி 3 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும், நியூசிலாந்து அணி 1 முறையும் 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 900 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து, இலங்கை அணிகள் தங்கள் வசம் வைத்துள்ளது.
இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 952 ரன்களை குவித்ததே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்சம் ஆகும். அந்த போட்டியில் ஜெயசூர்யா முச்சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ரன்னாக இங்கிலாந்திற்கு எதிராக 760 ரன்களை எடுத்துள்ளது.
காலேவில் நடந்து வரும் அயர்லாந்து – இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் டிராவிலோ அல்லது இலங்கை வெற்றியிலோ முடிவடையவே வாய்ப்பகள் அதிகளவில் உள்ளது. தோல்வியை தவிர்ப்பதற்காக அயர்லாந்து கேப்டன் பால்ப்ரைன்- டெக்டர் போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: 'குறுக்க இந்த கௌசிக் வந்தா..?' கேப்டன் கூல் தோனியையே கோபப்படுத்திய பதிரானா..! வைரலாகும் வீடியோ..!
மேலும் படிக்க: LSG vs PBKS: அதிரடி வெற்றி பெறுமா பஞ்சாப்? புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!