மேலும் அறிய

Sachin Tendulkar Birthday: சதங்களின் நாயகன்..! சச்சினை கவுரவப்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட்..!

இன்றுடன் 50வது பிறந்த நாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவுரவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றை எழுத வேண்டுமென்றால் சச்சினை தவிர்த்து எழுத முடியாது. ஏனெ்னறால் அவர் ஒரு சகாப்தம். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் அவர் ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகளை கடந்த பிறகும் அவர் வசமே உள்ளது.

சச்சின் 50வது பிறந்தநாள்:

டெஸ்ட், ஒருநாள், டி20, ஐ.பி.எல்., உள்ளூர் போட்டிகள், இங்கிலாந்து கவுண்டி கிளப் கிரிக்கெட் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடியுள்ளார். அப்பேற்பட்ட மகத்தான சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள் இன்று ஆகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவித்தது. உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக சிட்னி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வீரர்கள் மைதானத்திற்கு செல்வதற்கு உள்ள ஒரு பகுதியில் சிறிய அளவிலான கம்புகளால் செய்யப்பட்ட நுழைவுவாயில் (கேட்) அமைக்கப்பட்டுள்ளது.

கவுரவப்படுத்திய ஆஸ்திரேலியா:

சச்சினின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த கேட்டிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தின் கேட்டில் சச்சினின் பெயரை சூட்டுவதற்கு காரணம் அவர் அந்த மைதானத்தில் அளப்பரிய பல சாதனைகளை படைத்ததே ஆகும். ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் ஆதிக்கம் செலுத்தும் வீரராகவே உலா வந்துள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் உள்பட 785 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 2004ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 241 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்து அசத்தினார். சிட்னி மைதானத்தில் மட்டும் தன்னுடைய பேட்டிங் சராசரியாக 157 வைத்துள்ளார்.

சிட்னி மைதானம் பற்றி சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை குறிப்பிடும்போது, இந்தியாவிற்கு வெளியே எனக்கு மிகவும் பிடித்த மைதானம் சிட்னி மைதானம் ஆகும். ஆஸ்திரேலியாவிற்கு முதன்முறையாக 1991-92ம் ஆண்டு வந்தபோது எனக்கு சிட்னி தைானத்தில் சில சிறந்த நினைவுகள் உள்ளது என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சாதனைகள்:

சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கேட் வழியாக கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் களமிறங்க முடியும். இதேபோல கிரிக்கெட் வீரர்கள் மற்றொரு மைதானத்திற்குள் களமிறங்க மற்றொரு கேட்டும் உள்ளது. அந்த கேட்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவனான லாரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே சிட்னி மைதானத்தில் லாரா ஒரே இன்னிங்சில் 277 ரன்கள விளாசியிருந்தார். இந்த இரண்டு கேட் வழியாக மட்டும்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் களமிறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் மிக இள வயதில் டெஸ்ட் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1809 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 சதங்களும், 1 இரட்டை சதங்களும் அடங்கும். மொத்தமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 11 சதங்கள், 16 அரைசதங்களுடன் 3630 ரன்களை குவித்துள்ளார்.  சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3077 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்களை விளாசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget