T20 WC 2022 Prize Money: உலகக் கோப்பையில் ஜெயித்த அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு அளிக்கப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? தோல்வி அடைந்த அணிக்கும் பரிசுத் தொகை உண்டு.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் பரிசுத் தொகை சுமார் ரூ.13 கோடியாகும். பைனலில் தோல்வி அடைந்த அணிக்கு (பாகிஸ்தான் அணி) அதில் பாதித் தொகை அதாவது ரூ.6.5 கோடி அளிக்கப்பட்டது.
அரையிறுதி வரை வந்து தோல்வியைத் தழுவிய அணிகளுக்கும் தலா சுமார் ரூ.3 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. குரூப் 12 சுற்றுடன் வெளியேறிய அணிகள் தலா ரூ.55 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.
முதலில் களமிறங்கிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டர்கள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். அவர் ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, முதல் ஓவரிலேயே ஹேல்ஸ் நடையைக் கட்டினார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பிரித்தது.
இதையடுத்து களம் புகுந்த பிலிப் சால்ட் 10 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 20 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.
T20 WC 2022 Final: டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து.. குவியும் வாழ்த்து மழை..!
பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வின்னிங் ஷாட்டை அடித்தார். இவ்வாறாக 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் அரை சதம் (49 பந்துகளில் 52 ரன்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
T20 WC 2022 Prize Money: உலகக் கோப்பையில் ஜெயித்த அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?
2010 ஆண்டில் கடைசியாக டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது.