மேலும் அறிய

Heath Streak Death: மீண்டும் பொய்யென வரக்கூடாதா? சோகத்தில் கிரிக்கெட் உலகம்! மறைந்தார் ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக்..!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (செப்டம்பர்- 3) தனது 49 வயதில் காலமானார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (செப்டம்பர்- 3) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும் அமைதியாக மறைந்தார்” என பதிவிட்டு இருந்தார். 

May be an image of 13 people and text that says "Nadine Streak is with Holly Streak Cook. 11 m In the early hours of this morning, Sunday the 3rd of September 2023, the greatest love of my life and the father of my beautiful children, was carried to be with the Angels from his home where he wished to spend his last days surrounded by his family and closest loved ones. He was covered in love and peace and did not walk off the Park alone. Our souls are joined for eternity Streaky. Till hold you again KAKIEBOS o"

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்:

 ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்த இவர், உலக கிரிக்கெட்டிலும் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்டார். 

 ஹீத் ஸ்ட்ரீக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 216 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் 16 முறை 4 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 7 முறையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிறந்த ஆல்ரவுண்டர்:

டெஸ்ட் போட்டிகளையும் தொடர்ந்து ஹீத் ஸ்ட்ரீக் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். இவர், 29.82 சராசரியில் 239 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதில், ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,  ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை ஜிம்பாப்வே செய்துள்ளார். 

பேட்டிங் ரெக்கார்ட்: 

ஹீத் ஸ்ட்ரீக் பேட்டிங்கை பொறுத்தவரை அவர் டெஸ்டில் 1990 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2943 ரன்களும் எடுத்துள்ளார். ஸ்ட்ரீக் டெஸ்டில் 1 சதம் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம், ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதம் அடித்துள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் கேப்டன்சி சாதனை: 

கடந்த 2000 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஹீத் ஸ்ட்ரீக்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமித்தது. ஸ்ட்ரீக்கின் தலைமையின் கீழ், ஜிம்பாப்வே 21 டெஸ்ட் போட்டிகளில் 4ல் வென்று, 6 போட்டிகள் டிரா ஆன நிலையில், 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவர், 18 போட்டிகளில் வென்றுள்ளது. 47 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்ட்ரீக்கின் மரணத்திற்குப் பிறகு, பல முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் ட்வீட் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget