Watch Video:"பாப்பா நான் இருக்கேன் பா மதராவும் இருப்பேன் பா" - மகனுடன் ஹர்திக் பாண்டியா! வைரல் வீடியோ
நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடாசா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்த பிறகு முதல் முறையாக தனது மகன் அகஸ்தியாவை சந்தித்துள்ளார்.
நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடாசா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்த பிறகு முதல் முறையாக தனது மகன் அகஸ்தியாவை சந்தித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்குப்பிறகு இந்திய கிரிக்கெட் அணி வங்கததேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில், இந்திய அணி வங்கதேச அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகன் அகஸ்தியாவுடன் ஹர்திக் பாண்டியா:
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இவர்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பரஸ்பரம் இருவரும் பிரிவதாக அதிகார்ப்பூர்வமாக அறிவித்தனர். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அகஸ்தியா தன்னுடையா தாயார் நடாஷா உடன் வெளி நாட்டில் இருந்தார்.
Reunited 🥹🫶🤍 pic.twitter.com/szZ2PpBCcl
— Hardiklipsa (@93Lipsa) September 21, 2024
இச்சூழலில் தான் தற்போது அகஸ்தியாவை தன்னுடைய மனைவியுடனான விவாகரத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து ஹர்திக் பாண்டியா சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மகன் அகஸ்தியாவை அள்ளி பாசத்துடன் கொஞ்சுகிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கடைசியாக 2018 இல் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பாண்டியா, நவம்பர்-டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக முதல் தர போட்டிகளில் பரோடா அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Watch Video: "கடவுளே அஜித்தே" சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள் - நீங்களே பாருங்க!