Ravichandran Ashwin:"சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளை" - 37 முறை 5 விக்கெட்டுகள்!ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த அஸ்வின்! அடுத்த இலக்கு என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தார் அஸ்வின். இதன் மூலம் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தார் அஸ்வின். இதன் மூலம் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 133 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 21 ஓவர்கள் வீசினார். அதில், 88 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
- Century.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 22, 2024
- Six wicket haul.
- Player Of The Match award.
RAVI ASHWIN - THE UNDISPUTED KING OF CHEPAUK. 🐐 pic.twitter.com/q3WfEcLvud
இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்து உள்ளார். இச்சூழலில் அடுத்தடுத்து இந்திய அணி நீண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளதால் முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் அஸ்வின் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:
முத்தையா முரளிதரன் (இலங்கை) - 67 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 37 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து) 36 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அனில் கும்ப்ளே (இந்தியா) 35 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.