‛படார்னு விழாத... பதறுது...’ ரோகித் சர்மா காலில் விழுந்த ரசிகர் - வைரலாகும் புகைப்படம்!
போட்டியின்போது ரசிகர் ஒருவர் திடீரென்று மைதானத்திற்குள் புகுந்து, ரோகித் சர்மாவின் காலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், ரசிகரை எழுந்திருங்கள் என்று கூறுகிறார்.
ராஞ்சியில் நடைபெற்று வரும் டி20 போட்டியின்போது ரசிகர் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் காலில் விழுந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, போட்டியின்போது ரசிகர் ஒருவர் திடீரென்று மைதானத்திற்குள் புகுந்து, ரோகித் சர்மாவின் காலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், ரசிகரை எழுந்திருங்கள் என்று கூறுகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது இந்திய அணி முதல் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது.
A die hard Rohit Sharma fan in Ranchi. pic.twitter.com/FyoE2BUZ5w
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2021
முன்னதாக, நியூசிலாந்து ஓப்பனர்கள் குப்தில், டேரில் மிட்சல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பவர்ப்ளே முடிவதற்குள் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. ரன் ரேட் 10+ என அதிரடி காட்டி இருந்தது. தீபக் சஹார் வீசிய ஓவரில், குப்தில் அவுட்டாகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு பிறகு அடுத்து சேர்ந்த ஒவ்வொரு 20 ரன்களுக்கும் விக்கெட்டுகள் சரிந்தது. வரிசையாக, அடுத்த மூன்று விக்கெட்டுகள் சரிந்தாலும், இன்னொரு புறம் ரன் ஏறிக்கொண்டே இருந்தது.
இந்த போட்டியில், 2021 ஐபிஎல் தொடர் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய அணி வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
இந்திய அணியைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், அக்சர், அஷ்வின், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
ராஞ்சி: மைதானத்தில் ரோகித் சர்மா காலில் விழுந்த நபர்https://t.co/wupaoCQKa2 | #Ranchi | #IndiaVsNewZealand | #INDvsNZ | #RohitSharma pic.twitter.com/bPQx3aW0lm
— ABP Nadu (@abpnadu) November 19, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்