Australia vs Scotland 1st T20: டி20.. பவர் ப்ளேவில் மாஸ் காட்டிய டிராவிஸ் ஹெட்.. புதிய சாதனை படைத்தார்
பவர்ப்ளேவில் டிராவிஸ் ஹெட் மட்டும் 25 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். அந்தவகையில் பவர்ப்ளேவில் தனி நபரின் அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்தவகையில் 3 டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜாக்கர் பிரஸர் டக் அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் நின்ற டிராவிஸ் ஹெட்டுடன் களம் இறங்கினார் மிட்செல் மார்ஸ்.
பவர்ப்ளேயில் மாஸ் காட்டிய டிராவிஸ் ஹெட்:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். பவர்ப்ளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எட்டியது. இதன் மூலம் பவர்ப்ளேவில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்தது ஆஸ்திரேலியா. இதற்கு முன் செர்பியாவுக்கு எதிராக 5.4 ஓவர்களில் ருமேனியா 116 ரன்கள் எடுத்திருக்கிறது.
🚨World Record Alert🚨
— FanCode (@FanCode) September 4, 2024
The Aussies just smashed the record for most runs in powerplay by putting 113 on the board in the first 6 overs as Travis Head and Mitch Marsh went on a rampage against the Scottish bowlers.#SCOvAUSonFanCode pic.twitter.com/TXplrKQzZM
பவர்ப்ளேவில் டிராவிஸ் ஹெட் மட்டும் 25 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். அந்தவகையில் பவர்ப்ளேவில் தனி நபரின் அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 9.4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டி20யில் அதிக பவர்பிளே ஸ்கோர்
செர்பியாவுக்கு எதிராக 5.4 ஓவர்களில் ருமேனியா 116/0, 2021
ஆஸ்திரேலியா 113/1 vs ஸ்காட்லாந்து, 2024
தென்னாப்பிரிக்கா 102/0 vs வெஸ்ட் இண்டீஸ், 2023
வெஸ்ட் இண்டீஸ் 98/4 vs இலங்கை, 2021
வெஸ்ட் இண்டீஸ் 93/0 vs அயர்லாந்து, 2020
வெஸ்ட் இண்டீஸ் 92/1 vs ஆப்கானிஸ்தான், 2024
மேலும் படிக்க: Rahul Dravid: RR அணியின் பயிற்சியாளர்.. ராகுல் டிராவிட் எனும் பெரும்சுவர்! புதிய பொறுப்பில் வெல்வாரா?