CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் மீண்டும் தங்கம் வென்று அசத்திய பஜ்ரங் புனியா
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜரங் புனியா இறுதிப் போட்டியில் விளையாடினார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(62 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். இவர் இறுதிப் போட்டியில் கனடாவின் லால்சலன் மெக்நிலை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே பஜ்ரங் புனியா ஆதிக்கம் செலுத்தினார். அவர் கனடா வீரரை லாவகமாக எதிர்கொண்டு வேகமாக புள்ளிகளை பெற்றார். இறுதியில் 7-2 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கம் வென்று பஜ்ரங் புனியா அசத்தியுள்ளார்.
1st GOLD medal of the day folks 😍
— India_AllSports (@India_AllSports) August 5, 2022
Wrestling: Bajrang Punia wins Gold medal (65kg) after beating Lachlan McNeil 9-2 in Final.
👉 Bajrang did it in style: Won 1st 2 bouts by pinning opponents & Semis bout 10-0.
👉 Its 2nd consecutive CWG Gold medal for Bajrang. #CWG2020 pic.twitter.com/lfgrM8Hjtr
முன்னதாக மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் அன்ஷூ மாலிக் நைஜீரியாவின் ஒடுயான்யோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நைஜீரிய வீராங்கனை ஓடுயான்யோ 7-3 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக்கை வீழ்த்தினார். இதன்காரணமாக அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முன்னதாக ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர் அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மோஹித் வெண்கலப் பதக்க போட்டியில் சண்டை செய்ய உள்ளார். அதேபோல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இவர் ரெபிசார்ஜ் ரவுண்டில் வெற்றி பெற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்