மேலும் அறிய

விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்! ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்: விழுப்பும் மாவட்டத்தில் அதிரடி ஆய்வில் ஆட்சியர்!

முருங்கப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் துலுக்கன்குளம் தூர்வாரும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

​விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு புதிய கட்டடப் பணிகள் மற்றும் விளையாட்டுத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.8.50 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திடும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் சாரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலக வளாக கட்டடங்கள் கட்டுதல் திட்டத்தின் கீழ் 2024- 2025 நிதியாண்டின் சுமார் 5.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய கட்டடம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தில் ஒன்றியகுழு தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, உதவி செயற்பொறியாளர்கள் அறை, கூட்டரங்கம், பயிற்சி அரங்கம் மற்றும் சுகாதார அறைகள் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையிலும், உள்ளுார் விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், தலா 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் (Mini Stadiums) அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அரகண்டநல்லூரிலும், செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அவலூர்பேட்டையிலும் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் ஓமந்தூரிலும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றையதினம் மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூரில் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமானது ஒட்டப்பந்தய பாதை, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் உடற்பயிற்சிக் கூடம் போன்ற கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதனை தொடந்து, மயிலம் ஒன்றியம், கொடிமா ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை விரைவில் தொடங்க பயணாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பிட்டில் துலுக்கன்குளம் தூர்வாறும் பணியினை துவக்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் தெரு மற்றும் பூந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்கால் கரைப்பகுதியில் காய்கறி மற்றும் பூந்தோட்டம் அமைப்பதற்கு தூய்மை பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தலைப்பு செய்திகள்

நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget