மேலும் அறிய
TN Roundup: திமுக உடன் லாக்கான காங்கிரஸ், தஞ்சாவூரில் விஜய், அதிமுக கூட்டம்- தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- | காங்கிரஸ் கட்சியுடன் இன்று 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது திமுக - நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசிய நிலையில், இன்று முக்கிய முடிவு எட்டப்பட வாய்ப்பு
- தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவு
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் | சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தேர்தல் தொகுதிப் பங்கீடு, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்
உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும் என தகவல்
- தஞ்சாவூர் நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க தனி விமானத்தில் புறப்பட்ட விஜய் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இன்று(மார்ச்.4) பேச்சுவார்த்தை
- அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை உள்ளிட்டவற்றின் பயிற்றுநர்கள் 11,773 பேருக்கு தொகுப்பூதியம் ரூ.2500 உயர்வு
- தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2120 சரிந்து ரூ.1,21,600க்கு விற்பனை
- முழு வீச்சில் நடைபெற்று வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ரூ.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டம்
- தவெக கூட்டத்தில் கலந்துகொள்ள போலி QR Code அட்டையுடன் வந்த நபர் - எச்சரித்து அனுப்பிய போலீஸ்
- அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
- சென்னை திரு.வி.க. நகரில் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாமக்கல்லில் ஒரு கோடி முட்டைகள் தேக்கம்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























