Aishwarya Triple Jump : மும்முனை தாண்டுதலில் புதிய மைல் கல்… இதுவரை யாரும் செய்யாததை செய்த தங்கமகள் ஐஸ்வர்யா..
நீளம் தாண்டுதலில் 10 வருட சாதனையை முறியடித்த அடுத்த நாளே, மும்முனை தாண்டுதலில் இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்டை செய்து சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில் நேற்று, கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் தாண்டி காம்ன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தினார். இது நடந்த அடுத்த நாளே, மும்முனை தாண்டுதலில் 10 வருடமாக உடைக்கப்படாத சாதனையை உடைத்து அசத்தியுள்ளார்.
தேசிய தடகள சாம்பியன்ஷிப்
இந்தியாவின் சிறந்த தடகள வீரர்கள் ஒருங்கே சங்கமித்து தங்களில் யார் தலைசிறந்த வீரர்கள் என்பதை சென்னை நேரு விளையாட்டரங்கில் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். 61 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் கொண்டாட்டம் நேற்று களைகட்டியது.
நீளம் தாண்டுதல்
மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியின் இறுதிபோட்டிக்கான தகுதிச்சுற்றி போட்டி முதலில் நடத்தப்பட்டது. இரண்டு தமிழக வீராங்கனைகள் உட்பட 19 பேர் இதில் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர். இறுதியில் முதல் 12 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர். மின்னல் வேகத்தில் ஓடி கட்டையில் காலை ஊன்றி அந்தரத்தில் பறந்து சாகசம் நிகழ்த்திய கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் காமல்வெல்த் வாய்ப்பையும் உறுதி செய்தார். அத்துடன் 2011 ம் ஆண்டு மயோகா நிகழ்த்தி 6.63 மீட்டர் என்ற சாதனையும் முறியடித்தார்.
மும்முனை தாண்டுதல் ( Triple Jump )
நீளம் தாண்டுதலில் 10 வருட சாதனையை முறியடித்த அடுத்த நாளே, ட்ரிபிள் ஜம்பில் இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்டை செய்து சாதனை படைத்துள்ளார். 14.14மீ தாண்டி அனைவரையும் வாய்பிளக்க செய்துள்ளார் ஐஸ்வர்யா. அவரை குறித்து அவர் பயிற்சியாளர் கூறும்போது, அவர் நீளம் தாண்டுதலில் 7 மீ கடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, ட்ரிபிள் ஜம்பில் அவர் தொடப்போகும் சாதனைகள் இன்னும் நிறைய இருக்கிறது.
National Record for B Aishwarya of Karnataka in the Women's Triple Jump. She jumps 14.14m at the Inter State championships in Chennai. Just a day ago she jumped a massive 6.73m in the long jump! Aishwarya breaks the old triple jump NR of 14.14m set by Mayookha Johnny in 2011. pic.twitter.com/T57DFC9fwb
— jonathan selvaraj (@jon_selvaraj) June 13, 2022
ஐஸ்வர்யா
தடகளத்தில் ஐஸ்வர்யாவின் பயணம் நீளம் தாண்டிதலில் தொடங்கவில்லை. ஜூனியர் மட்டத்தில் ஒட்டப்பந்தய வீரராக பயிற்சி பெற்ற பிறகு, நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் போன்றவற்றில் தனது இயல்பான வேகத்தை சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். “வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் விளையாட்டில் ஈடுபட்டேன். எனது கடின உழைப்பு இப்போது பலனளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று அவர் ட்ரிபிள் ஜம்ப் வெற்றிக்குப் பிறகு புன்னகையுடன் கூறினார்.
அதே போல் மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் உத்திரபிரதேச வீராங்கனை அன்னு ராணி 60.97 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார். இதில் ஹரியானா வெள்ளிப் பதக்கத்தையும் ராஜஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்