மேலும் அறிய

முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!

ரஞ்சி கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்காக மகுடம் சூடிய கேப்டன் பராஸ் டோக்ராவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கர்நாடகாவின் ஹுப்ளியில் நடந்த ரஞ்சி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று கர்நாடக அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பட்டம் பெற்று சாம்பியன் மகுடம் சூடியுள்ளது. 

முதன்முறை ரஞ்சி சாம்பியன்:

1959ம் ஆண்டு முதல் ரஞ்சி கிரிக்கெட் ஆடி வரும் ஜம்மு காஷ்மீர் அணி இதுவரை பத்தோடு பதினொன்று அணிகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், கே.எல்.ராகுல், மயங்க் அகரவால், தேவ்தத் படிக்கல், கருண்நாயர், பிரசித் கிருஷ்ணா, விஜயகுமார் வைஷக் என வலுவான கர்நாடக அணியை திறமையான படையைக் கொண்டு வீழ்த்தியவர் பராஸ் டோக்ரா.

உள்ளூர் கிரிக்கெட்டில் ஜாம்பவனாக திகழ்ந்த இவர் ஜம்மு காஷ்மீர் அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் பெற வைத்துள்ளார். யார் இவர்? என்று கீழே விரிவாக காணலாம்.

யார் இந்த பராஸ் டோக்ரா:

41 வயதான பராஸ் டோக்ரா இமாச்சலபிரதேசத்தில் கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்தவர். வலதுகை பேட்ஸ்மேனான இவர் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பாண்டிச்சேரி அணிகளுக்காக ஆடிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடியவர்.

முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 153 போட்டிகளில் 246 இன்னிங்சில் ஆடி 10 ஆயிரத்து 603 ரன்களை எடுத்துள்ளார். அதில் 34 சதங்களும், 37 அரைசதங்களும் அடங்கும். சராசரியாக 47.93 வைத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 130 கிரிக்கெட்டில் 3751 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 39.90 வைத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் எடுத்துள்ளார். 105 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 324 ரன்கள் எடுத்துள்ளார்.

ரஞ்சியில் அசத்தல்:

2012 -13 ரஞ்சி சீசனில் இமாச்சல பிரதேசம் அணிக்காக ஆடி 8 போட்டிகளில் 5 சதங்கள் விளாசினார்.  வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2015-2016 ரஞ்சி சீசன்களில் 703 ரன்களை விளாசியுள்ளார். 

ஐபிஎல் தொடரில் 2010 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக தேர்வானார். ஐபிஎல் தொடரில் 3 அணிகளுக்காக மொத்தம் 13 போட்டிகளில் ஆடி 127 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்துள்ளார். 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி வருகிறார். 

புதிய வரலாறு:

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க போதுமான அனுபவமும், திறமையும் இருந்தும் ஒரு முறை கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், விடா முயற்சியுடன் ஜம்மு காஷ்மீர் அணிக்காக இன்று புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget