மேலும் அறிய

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

June Month Rasi Palan 2022 in Tamil: ஜூன் மாதத்திற்கான 1 முதல் 30-ந் தேதி வரையிலான மாத ராசிபலனை ஒவ்வொரு ராசியினருக்கும் ஜோதிடர் டாக்டர் ஆச்சார்யாஹரிஷ்ராமன் கூறியுள்ளார்.

ஜூன் மாதத்திற்கான மாத ராசிபலன்களை ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிடர் டாக்டர் ஆச்சார்ய ஹரிஷ்ராமன் கூறியுள்ளனர்.

மேஷம் :

மேஷ ராசி நண்பர்களுக்கு அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய காரியங்கள் எளிதாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நல்ல காரியங்கள் நடக்கும். பரணி நட்சத்திரததினருக்கு திருமணத் தடைகள் நீங்கும். கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மொத்தத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டும். பெண்களுக்கு யோகமான நாள். வீட்டில் சிறு, சிறு பிரச்சினை உண்டாகும். முருகனை வழிபட வேண்டும்.

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

ரிஷபம் :

ரிஷப ராசி நண்பர்களே கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு பயனே இல்லை என்ற விஷயத்தில் இருந்து பணம் வரும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். மிருகரிஷி நட்சத்திரத்தினருக்கு நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். தொழில்ரீதியாக இருந்த இன்னல் விலகும். பதவி உயர்வு ரோகிணி நட்சத்திரத்தினருக்கு உண்டாகும். பெரியவர்களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை வேண்டும். அரசு அதிகாரிகள், ஆசிரியை தொழில், தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கு அற்புதமான மாதம் ஆகும். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. வெளிநாட்டு வேலை யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு யோகம் உண்டாகும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் அபார முன்னேற்றம் காணலாம். மகாலட்சுமி வழிபாடு பெரியளவில் கை கொடுக்கும்.  

மிதுனம் :

மிதுன ராசி நண்பர்களே மிருகரிஷிச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தினருக்கு பல நன்மைகள் உண்டாகும். இளைய சகோதரர்கள் வழியாக தேவையில்லாத சிக்கல்கள், பிரச்சினைகள் உண்டாகும். கையெழுத்துபோடும் சம்பவங்களில் கூடுதல் கவனம் தேவை. மாதத்தின் இறுதிப்பகுதியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். கட்டுமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கண்டம் ஏற்படும். நண்பர்களிடம் கவனம் தேவை. பெண்கள் மன வருத்தத்தை அடுத்தவரிடம் பகிரக்கூடாது. தொழிலில் கூடுதல் கவனம் தேவை. கிருஷ்ணனை வழிபட வேண்டும்.

கடகம் :

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

கடக ராசிக்காரர்களே புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்மை உண்டாகும். எதிர்பார்க்காத பல லாபங்கள் கிட்டும். பெற்றோர் வழியில் நன்மை உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்பச்சுற்றுலா வாய்ப்பு உண்டாகும். குடும்பத்துடன் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பலவித நன்மைகள், எதிர்பாராத பணவரவு, பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யம் உண்டாகும். உங்கள் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு திருமணம் நடக்கும், குல தெய்வ ஆலயத்திற்கு செல்வீர்கள். பல வித திருப்தியான மாதமாக இந்த மாதம் அமையும். இந்த மாதத்தில் பெண்களின் உடல் நல குறைகள் தீரும். ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். காஞ்சி அம்மனை வழிபட வேண்டும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்கார நண்பர்களே மக நட்சத்திரத்தினருக்கு திருமணத்தடைகள் இருக்கும், வேலைப்பளு அதிகரிக்கும், தூக்கம் பாதிக்கப்படும். பூரண நட்சத்திரத்தினருக்கு வீட்டில் பிரச்சினை உண்டாகும். வேலை பிரம்மாண்டமாகவும், பணவரவும் இருக்கும், ஆனால், வேலைப்பளு கடுமையாக அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தினருக்கு பலவித நன்மைகள் உண்டாகும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் மிகவும் கெட்டிக்காரர்கள். தேவையில்லாத பிரச்சினைகள், சவால்கள் ஏற்படும். தங்க நகைகள் காணாமல் போக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினை உண்டாகும். 30 நாட்களும் வேலைக்கு செல்வது நல்லது. திருப்தி இருக்காது. அரசுப்பணி யோகம் உண்டாகும். நீட் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். துர்க்கை அம்மனை வழிபட்டு வர வேண்டும்.

கன்னி :

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

கன்னி ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் உத்திர நட்சத்திரத்தினருக்கு வேலை விஷயத்தில் கவனம் தேவை. சோம்பேறித்தனம் உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு திருமணத்தடைகள் நீங்கும். நல்ல விஷயங்களுக்காக செல்வீர்கள். குழந்தைகளால் பெருமைப்படுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தினர் பெற்றோர்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கும். கண்டிப்பாக சிவ பெருமான் ஆலயத்திற்கு சென்று வருவீர்கள், கன்னி ராசியினர் கணவன் – மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும், காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். விதிகளை முறையாக கடைபிடிப்பீர்கள். உங்கள் ரூல்ஸ் வைத்து பலரும் உங்களிடம் தடுமாறிப்போவார்கள். மனோதிடம், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருப்பதி பெருமானை வணங்கி வர வேண்டும்.

துலாம் :

துலாம் ராசிக்கார நண்பர்களே, சித்திரை நட்சத்திரத்தினர் சகோதர வழியில் தேவையில்லாத சண்டைகள் உண்டாகும். கவனம் தேவை. சுவாதி நட்சத்திரத்தினருக்கு பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் தேவை. குலதெய்வ வழிபாடு அவசியம். விசாக நட்சத்திரத்தினருக்கு பயணத்தடைகள், நண்பர்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படும். துலாம் ராசியினர் பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படலாம். நண்பர்கள் சிலர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு. தொழில் அமோகமாக இருக்கும். முக்கிய விவகாரங்கள் வெற்றி பெறும். காரியம் கைகூடும். குழந்தைகள் விவகாரம் அம்சமாக இருக்கும். அரசுப்பணித் தேர்வில் அபார வெற்றி கிட்டும். சிவபெருமானை வில்வத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

விருச்சிகம் :

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

விருச்சிக ராசிக்கார நண்பர்ளே, விசாக நட்சத்திரத்தினருக்கு மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை நன்றாக கை கொடுக்கும். அனுஷ நட்சத்திரத்தினருக்கு திருமணம் நடக்கும். காதல் கைகூடும். கேட்ட நட்சத்திரத்தினருக்கு வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடக்கும். பணவரவ உண்டாகும். முதலீடு செய்வீர்கள். நிறைய மக்கள் சந்திப்பு ஏற்படும். பெரிய பணவரவு உண்டாகும். முன்ஜென்ம யோகம் இந்த காலத்தில் பணமாக கிட்டும். தங்கம், பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீடு செய்து லாபம் கிட்டும். கடன் தீரும். உடல்நல பிரச்சினை தீரும். அபார வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நன்மை உண்டாகும். மன மகிழ்ச்சி உண்டாகும். கல்யாண வெங்கடராமன சுவாமி கரூர் தான்தோன்றி மலையில் உள்ள ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே மூல நட்சத்திரத்தினர் கெத்தாக இருப்பீர்கள், பயங்கர சாதனை படைக்கும் மாதமாக அமையும். உத்திராட நட்சத்திரத்தினர்  வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். சொத்துக்கள் கைமாறும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு பயணம் செய்வீர்கள். தனுசுக்கு வெற்றி மீது வெற்றி உங்களைத் தேடி வரும். ஆலயம் கட்டும் புண்ணியம் உண்டாகும். நண்பர்களின் உதவியும், கடவுளின் அனுகிரகம் உண்டாகும். வெளிநாட்டில் பிரம்மாண்ட வீடு கட்டுவீர்கள். கல்வி சார்ந்த பணி நன்றாக கிட்டும். பண வரவு நன்றாக இருக்கும். நிரந்தர பணி கிட்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிட்டும். குல தெய்வ வழிபாடு அவசியம். குழந்தைகளுக்கு யோகம் உண்டாகும். ராகவேந்திரை வழிபட வேண்டும்.

மகரம் :

மகர ராசிக்கார நண்பர்களே உத்திராட நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் விவகாரங்கள் உண்டாகும். திருவோண நட்சத்திரத்தினருக்கு பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சந்தோஷம் உண்டாகும். நண்பர்கள் மூலம் நல்ல காரியங்கள் கிட்டும். அவிட்டம் நட்சத்திரத்தினர் பல வித பிரச்சினைகளில் இருந்து வெளிவருவீர்கள். இந்த மாதத்தில் திடீர், திடீர் இன்பம் கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தானம் செய்வீர்கள். பெண் குழந்தை யோகம் உண்டாகும். பூர்வீக இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்தை காட்டிலும் சிறப்பான சம்பவங்கள் நடக்கும். முக்கிய நிகழ்வுகள் எளிதாக நடக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதம் ஆகும். ஆனால், எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். வெங்கடேஸ்வர சுவாமியை வழிபட்டு வர வேண்டும்.

கும்பம் :

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

கும்ப ராசிக்காரர்களே அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு காசு, பணம், துட்டு என்று இருப்பீர்கள். குடும்பம், குடும்பத்தைச் சார்ந்த எண்ணங்களில் சதயம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு ஐ.டி. துறையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கட்டுமான தொழில், ஆசிரிய தொழில், அரசு தொழிலில் யோகம் உண்டாகும். மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு யோகம் உண்டாகும். ஏதாவது ஒரு விதத்தில் பணம் வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். உறவினர் பிரச்சினைகளின் பஞ்சாயத்தைநீங்கள் செய்வீர்கள். உடலில் ஆரோக்கியம் தேவை. உணவில் அக்கறை வேண்டும். வெற்றியை கொடுக்கும் மாதமாக இருந்தாலும் உடலில் அக்கறை தேவை. முன்னேற்றங்கள் இருந்தாலும் பொறுமையாக செயல்பட வேண்டும். தாய்வழியில் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு வழங்கும் அறிவுரையால் மதிப்பு கூடும். ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.

June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

மீனம் :

மீன ராசிக்கார நண்பர்களே பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம், தொழில்மாற்றம் மற்றும் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு எழுத்துப்பூர்வ பணி வெற்றி கொடுக்கும். ரேவதி நட்சத்திரத்தினருக்கு மீடியா துறையில் இருப்பவர்களுக்க பல வித வெற்றியை கொடுக்கும். மீன ராசியினருக்கு உடல்நல பிரச்சினைகள் நீங்கும். முக்கிய ஆவணங்கள் வாங்குவீர்கள். எதிரிகளுடன் சிக்கல் தீர்ந்து அன்யோன்யம் உண்டாகும். பலவித முன்னேற்றங்கள் இந்த மாதத்தில் அமையும், வீடு கிரக பிரவேசம் செய்வீர்கள், வாகனம் வாங்குவீர்கள். குழந்தைகள் பாக்கியம் உண்டாகும். விளையாட்டில் முன்னேற்றம் கிட்டும். பெண்கள் தங்கம் வாங்குவீர்கள். புது இட யோகம் உண்டு. கூட்டுத்தொழில் முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் அக்கறை தேவை. சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். உடல் மெலிந்து இருக்க உடற்பயிற்சி தேவை. தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் தீரும். நன்மைகள் அபாரமாக நடக்கும். ராமானுஜரை,. சித்தரை வழிபட வேண்டும்.

ஜோதிடர் ஜோதிடர் டாக்டர் ஆச்சார்ய ஹரிஷ்ராமனன்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டும் டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஸ் ஜோடி!
India vs Australia LIVE SCORE: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டும் டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஸ் ஜோடி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டும் டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஸ் ஜோடி!
India vs Australia LIVE SCORE: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டும் டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஸ் ஜோடி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget