அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
அதிமுகவுடன் தேர்தல் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் வந்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அண்ணாமலை மிஸ் ஆகியுள்ளார். அதிமுக கூட்டணிக்குள் விரிசல் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாஜகவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக பேச்சு அடிபடுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி அமையும் போது அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கி நயினார் நாகேந்திரனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தது பாஜக தலைமை. ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி முறிவதற்கு அண்ணாமலை காரணமாக இருந்ததால் மீண்டும் கூட்டணி அமைந்த பிறகு பாஜக தலைமையே அண்ணாமலையை ஓரங்கட்டி வருவதாக சொல்கின்றனர். இந்த முறை அதிமுகவுக்கு தேவையான சப்போர்ட்டை கொடுத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வேலை பார்த்து வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்தார் அமைச்சர் அமித்ஷா. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் பியூஸ்கோயல். இந்த நேரத்தில் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்துள்ளார்.
கமலாலயத்தில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோருடன் முக்கிய மீட்டிங் நடந்தது. இதில் அண்ணாமலை மிஸ் ஆகியுள்ளார். யார் யாரையெல்லாம் கூட்டணிக்கு அழைக்கலாம்? விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா? அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தியுள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இதில் பேசப்பட்டதாக சொல்கின்றனர்.
2024 மக்களவை தேர்தலின் போது அனைத்தையும் முன்நின்று செய்த அண்ணாமலை இந்த முறை பேச்சுவார்த்தை நடக்கும் கூட்டம் பக்கம் கூட தலைகாட்டாமல் இருக்கிறார். அண்ணாமலையால் கூட்டணிக்குள் எதுவும் சொதப்பி விடக் கூடாது என்பதற்காக பாஜக தலைமையே அவரை அதிமுக விவகாரங்களில் இருந்து தள்ளி வைப்பதாக பேச்சு அடிபடுகிறது. அண்ணாமலை தமிழ்நாட்டிலேயே இல்லை, அதனால் தான் பியூஸ் கோயலை சந்திக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.





















