விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு விழாவில் பேசியவர் பைபிளில் வரும் 'யோசேப்பு' என்பவரின் வாழ்க்கையை ஒரு குட்டி ஸ்டோரியாகக் கூறி தொண்டர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்தினார். தற்போது அந்த குட்டி ஸ்டேரி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பைபிளில் இடம்பெற்றுள்ள 'யோசேப்பு' என்ற இளைஞனின் கதையை விஜய் கூறினார். தனது தந்தை மீது அதிக அன்பு கொண்ட யோசேப்பை, பொறாமை காரணமாக அவரது சொந்த அண்ணன்களே ஒரு பாழ் கிணற்றில் தள்ளிவிட்டனர். அங்கு வந்த வியபாரிகள் அவனை காப்பாற்றி அவனை எகிப்து நாட்டிற்கு அடிமையாக விற்றனர். அடிமையாகச் சென்ற இடத்திலும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த யோசேப்பு, தனது தன்னம்பிக்கையாலும், கனவுகளுக்குப் பலன் சொல்லும் தனித்துவமான திறமையாலும் எகிப்து மன்னரின் நன்மதிப்பைப் பெற்றார். இறுதியில், அடிமையாக இருந்த அதே யோசேப்பு, எகிப்து தேசத்தின் மிக உயரிய பதவியான கவர்னர் பதவிக்கு உயர்ந்தார்.பஞ்ச காலத்தில் உணவின்றித் தவித்த அதே அண்ணன்கள், ஒருமுறை யோசேப்பிடம் உதவி தேடி வந்தனர். அவர்கள் செய்த துரோகத்தை மறந்து, அவர்களை மன்னித்து உணவளித்து வாழ வைத்தார் யோசேப்பு.
இந்தக் கதையைச் சொல்லி முடித்த விஜய், இறுதியில் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார். கடவுளின் அருளும், மக்களை நேசிக்கும் அன்பும், கடின உழைப்பும் இருந்தால் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளையும் வெல்லலாம்' என்று குறிப்பிட்டார். மேலும், 'இந்தக் கதை யாருக்கானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை' என்று அவர் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜோசப் அரசனான கதையை விஜய் சொல்வது அவர் விருப்பம். ஆனால் ஜோசப் எகிப்த் மக்களை அவர்களின் வறுமையை பஞ்சத்தால் உருவான சூழலை பயன்படுத்தி நிலம் , கால் நடைகள் அனைத்தையும் மன்னனுக்கு எழுதி வாங்கி கொண்டு அவர்களை மன்னனுக்கு வேலை செய்யும் அடிமைகளாக ஆக்குவார் என்பது தான் உண்மை. இப்படி தான் ஜோசப் மெல்ல மன்னன் ஆவார். பஞ்சத்தில் இருக்கும் மக்களின் உணவு தேவையை பயன்படுத்தி நிலத்தை அவர்கள் கால் நடைகளை மொத்தமா பிடிங்கி கொள்வதும் , மன்னனுக்கு அடிமையாக மாற்றுவதும் ஏற்புடைய செயல் அல்ல. பஞ்சம் முடிந்த அடுத்த ஆண்டு முறையாக வரி கொடுத்தால் போதுமானது என கூறியிருந்தால் கூட ஒரு நியாயமான நிர்வாக யுக்தி என சொல்லலாம். ஜோசப் செய்தது அவர் அரசனாக வேண்டும் என்ற நோக்கத்திற்கு வேண்டும் என்றால் சரியாக தெரியலாம் ஆனால் மக்களுக்கு அவர் செய்தது தவறு. முழு கதையை படிக்காமல் அல்லது பாதி கதையை வைத்து அரசன் ஆன கதையை சொல்லியுள்ளார் என சமூக வளைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





















