OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
OPS vs EPS: தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்பொழுது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகார மோதல் உச்சத்தை தொட்டது. தலைமை இடத்தை பறிக்க போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக பல பிளவுகளாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து தனி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனியாக பிரிந்து இருந்தாலும் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்த 3 பேரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், டிடிவி
இதன் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வாக்குகள் சிதறி தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இவர்களுக்கு எதிராக அதிமுக தனி அணியாக போட்டியிட்டது. ஆனால் வாக்குகள் சிதறி தோல்வி தான் கிடைந்தது. எனவே 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலாவது ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லையென புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன் படி அதிமுக - பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு 3 இடங்களும், டிடிவி தினகரனுக்கு 5 இடங்களும் ஒதுக்க இபிஎஸ் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
இபிஎஸ் இருக்கும் வரை இணையமாட்டோம்
இந்த சூழ்நிலையில், இ.பி.எஸ். உள்ள வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என தெரிவித்த ஓபிஎஸ், அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிவதாகவும் கூறினார். எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என நிர்வாகிகள் பேசியதையும் வழிமொழிவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
யாருடன் கூட்டணி.?
முன்னதாக சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது
Option a தவெக
Option b திமுக
என இரு வாய்ப்புகளை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





















