Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER"பியூஸ் கோயலின் ORDER பாஜக MEETING-ல் பேசியது என்ன?
விஜய் தேர்தலில் ஒரு Spoiler ஆக இருப்பார் என பியூஸ் கோயல் பாஜக நிர்வாகிகளிடம் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சேர்த்து விஜய் பற்றிய முக்கியமான அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. திமுகவை வீழ்த்தும் வகையில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு என ஆலோசனை தீவிரமெடுத்துள்ளது. அந்தவகையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி வியூகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்தார்.
பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன்,நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, ஹெச்.ராஜா உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாதகமாக உள்ள தொகுதிகளின் லிஸ்ட்டை கேட்டுள்ளார். மேலும் தேர்தலுக்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் ஆர்டர் போட்டுள்ளார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகிகள் வாய்ப்பு இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விஜய் தமிழக தேர்தலில் ஒரு Spoiler ஆக இருப்பார் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் தவெகவால் பாஜக கூட்டணிக்கு வெற்றிக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார். வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணிக்கு சாதகமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது பாஜகவிற்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, எந்த எந்த தொகுதி, அதிமுக- பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.




















