மேலும் அறிய
Thanni Chutney Recipe : தேங்காய் இல்லாமல் மதுரை ஃபேமஸ் தண்ணி சட்னி..இன்றே செய்யுங்கள்!
Thanni Chutney Recipe : தேங்காய் இல்லையா..? கவலை வேண்டாம்..இந்த சுவையான மதுரை ஃபேமஸ் தண்ணி சட்னியை செய்து அசத்துங்கள்.

தண்ணீ சட்னி
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 5 பற்கள், பச்சை மிளகாய் - 10 கீறியது, பொட்டு கடலை - 1/2 கப், கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, உளுந்து - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, அரைத்த சட்னி, தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் ஒரு பானில் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3/6

வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பொட்டு கடலை, கல்லுப்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4/6

பின் பானில் எண்ணெய், உளுந்து, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5/6

பின்பு அரைத்த சட்னி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
6/6

அவ்வளவுதான் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.
Published at : 27 Apr 2024 02:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
இந்தியா
க்ரைம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion