மேலும் அறிய
Sago Milk Pudding : குளு குளு ஜவ்வரிசி பால் புட்டிங் ...இப்படி செய்து அசத்துங்க!
Sago Milk Pudding Recipe : ஜவ்வரிசி பால் புட்டிங் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
![Sago Milk Pudding Recipe : ஜவ்வரிசி பால் புட்டிங் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/41a8f36fcfd92e8f280e53943da42ad21713773633543571_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜவ்வரிசி பால் புட்டிங்
1/6
![100 கிராம் நைலான் ஜவ்வரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். ஒரு கொதி வந்தவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/2b8b56e1196c8c7d4940e54fd6540f57158d2.png?impolicy=abp_cdn&imwidth=720)
100 கிராம் நைலான் ஜவ்வரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். ஒரு கொதி வந்தவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
2/6
![இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஃபுட் கலர் சேர்க்கவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடிப்பதம் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடித்து விட வேண்டும். வடிகட்டி எடுத்த ஜவ்வரிசியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/b7f380f879efe4453ea9a6ca6fa9c8e471c24.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஃபுட் கலர் சேர்க்கவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடிப்பதம் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடித்து விட வேண்டும். வடிகட்டி எடுத்த ஜவ்வரிசியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.
3/6
![அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்க்கவும். பால் கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து 3 டீஸ்பூன் கடல் பாசியை சேர்த்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/8b4a8dd8afb09a69fc7c496eb6850cb2080b3.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்க்கவும். பால் கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து 3 டீஸ்பூன் கடல் பாசியை சேர்த்துக் கொள்ளவும்.
4/6
![100 கிராம் பொடித்த சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் வேக வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை இதில் சேர்க்கவும். இதை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/dd305fa0d109e68d2a177d805e3f0163b3364.png?impolicy=abp_cdn&imwidth=720)
100 கிராம் பொடித்த சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் வேக வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை இதில் சேர்க்கவும். இதை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
5/6
![இந்த கலவையை ஊற்றி வைக்க ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் உட்புறத்தில் வெண்ணெய் தடவி கொள்ளவும். இப்போது இந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றவும். இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/75338d907614c50001f5dc4fe7d79ab7608b7.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த கலவையை ஊற்றி வைக்க ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் உட்புறத்தில் வெண்ணெய் தடவி கொள்ளவும். இப்போது இந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றவும். இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடவும்.
6/6
![இரண்டு மணி நேரத்திற்கு பின் இதை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, ஒரு தட்டின் மீது கவிழ்த்து தட்டி எடுக்கவும். இப்போது புட்டிங் தனியே வந்து விடும். இதை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து பரிமாறலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/7db0842b88a258f8efd05baca964582182df1.png?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு மணி நேரத்திற்கு பின் இதை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, ஒரு தட்டின் மீது கவிழ்த்து தட்டி எடுக்கவும். இப்போது புட்டிங் தனியே வந்து விடும். இதை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து பரிமாறலாம்.
Published at : 22 Apr 2024 02:57 PM (IST)
Tags :
Dessert Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion