மேலும் அறிய
Yuvan Shankar Raja : இளமை மாறாத யுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த படைப்புகள்!
Yuvan Shankar Raja : 28 ஆண்டு கால இசைப்பயணத்தில் யுவன் ஷங்கர் ராஜா, இசையமைப்பது, பாட்டுப்பாடுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் சில பாடல்களையும் எழுதி உள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா
1/6

யுவன் ஷங்கர் ராஜா, பூவெல்லாம் கேட்டுப்பார், நந்தா, மெளனம் பேசியதே, பேரழகன், அஞ்சான், என் ஜி கே உள்ளிட்ட சூர்யா படங்களுக்கும் தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2/6

இவ்வளவு ஆண்டு கால இசை பயணத்தில் புதிய கீதை படத்திற்கு பின் தி கோட் படத்தின் மூலம் இரண்டாவது முறை விஜய்யுடன் இணைந்துள்ளார் யுவன்.
3/6

தனுஷின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, நானே வருவேன் படங்களுக்கு இசையமைத்து, சிம்புவுக்கு மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம், மாநாடு என பல ஹிட்களை கொடுத்தார் யுவன் ஷங்கர் ராஜா.
4/6

பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி, விருமன் என கார்த்தியின் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை சூப்பர் ப்ளேலிஸ்டை கொடுத்துள்ளார். யுவனின் 100வது படமான பிரியாணியில் வரும் எதிர்த்து நில் பாடலில் ஜிவி பிரகாஷ் குமார், இமான், தமன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் யுவனுடன் பாடி இருந்தனர்.
5/6

இசையமைப்பது போக தீராத விளையாட்டி பிள்ளை படத்தில் வரும் இண்ட்ரோ பாடலையும், எவன் டி உன்ன பெத்தான் பாடலை சிம்புவுடனும், விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரனுடனும் இணைந்து எழுதியிருந்தார்.
6/6

இதுபோக போகாதே, ஏதோ ஒன்று என்னை தாக்க, சாய்ந்து சாய்ந்து, காதல் ஆசை, மெஹர்சைலா, அந்த கண்ண பாத்தாக்கா உள்ளிட்ட பல பாடல்களையும் பாடியுள்ளார்.
Published at : 31 Aug 2024 12:22 PM (IST)
Tags :
Yuvan Shankar Rajaமேலும் படிக்க
Advertisement
Advertisement





















