மேலும் அறிய
உரியடி நாயகன் மீண்டும் வரார்.. டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் ஃபைட் கிளப்!
உரியடி படத்தின் ஹீரோவான விஜய் குமார் நடிப்பில் ஃபைட் கிளப் படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.

ஃபைட் கிளப்
1/6

உறியடி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜய் தற்போது பைட் கிளப் எனும் திரைப்படத்தின் வாயிலாக மீண்டும் நாயகனாக திரைக்கு வர உள்ளார்.
2/6

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் புதியதாக ஜி ஸ்கொயர் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
3/6

தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பைட் கிளப் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
4/6

இத்திரைப்படமானது வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. உறியடி 2 திரைப்படம் வெளியாகி ஐந்தாண்டுகள் கழித்து நடிகர் விஜயின் ஃபைட் கிளப் திரைப்படம் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
5/6

பைட் கிளப் திரைப்படத்தை, உறியடி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அப்பாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் நீளம், 2 மணி நேரம் 17 நிமிடங்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.
6/6

வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகும் கண்ணகி, சபாநாயகன், பைட் கிளப் ஆகிய படங்களின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Published at : 13 Dec 2023 06:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement