மேலும் அறிய
Travel tips : ட்ரிப் செல்லும் போது உடல் சோர்ந்து விடுதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
Travel tips : பயணத்தின் போது உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பயணம்
1/7

அன்றாட வேலை அலுப்பில் இருந்து விடுபட இன்றைய இளைஞர்கள் பலர் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
2/7

ட்ரிப் சென்று வந்தவுடன் ஒரு விதமான புத்துணர்ச்சியும் நல்ல அனுபவமும் நினைவுகளும் கிடைக்கும். அத்துடன் பழகுவதற்கு புதிய வட்டாரமும் கிடைக்கும்.
3/7

சுற்றுலா செல்லும் போது வெகுதூரம் பயணிக்கும் அவசியம் இருக்கும். அப்போது உடலின் ஆற்றல் குறைந்துவிடும். பயணத்தின் போது உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்
4/7

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி எழுந்து கொள்ள வேண்டும். சரியான தூக்கம் இல்லையென்றால் உடல் சோர்ந்துவிடும்
5/7

தேவையான தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடலை, பாதாம், பிஸ்தா என ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
6/7

பசிக்கவில்லை என்று சாப்பிடாமல் இருக்க வேண்டாம். பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்
7/7

ட்ரிப் செல்வதற்கு 1 வாரம் முன் உடற்பயிற்சி செய்து உடலை ரெடியாக்கி கொள்ளுங்கள். அப்போது நடக்க, மலை ஏற, நீச்சல் செய்ய வசதியாக இருக்கும்
Published at : 01 Apr 2024 12:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement