மேலும் அறிய

தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு

திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நவீன தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

இந்திய இலக்கிய விருதுகளில் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பெரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகிலன் , ஜெயகாந்தன் தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பின் இந்த விருது தமிழ் கவிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. தமிழ் திரையுலகைச் பொறுத்தவரை வைரமுத்துவிற்கு இந்த விருது கிடைத்துள்ளதை பெரியளவில் வரவேற்று வருகிறார்கள். என்றாலும் நவீன தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்துவிற்கு ஞானபீட விருது வழங்கப்படுவது தமிழுக்கே அவமானம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது 

ஞானபீட விருது பெற்றது குறித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். "ஞானபீட விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்படும் ஞானபீட விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை தமிழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. விருதுகளும் இப்போதுதான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதைக் குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்." என அவர் இந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம் 

தனது வலைதளத்தில் ஜெயமோகன் "பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று.வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். 

இந்திய  துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்." என அவர் தனது தளத்தில் எழுதியுள்ளார்

பின்குறிப்பு : ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சில பகுதிகள் இவை. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget