மேலும் அறிய
Cinema Update : வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதா?
Cinema Update: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் வாடிவாசல். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என தகவல்கள் பரவிவருகிறது.

சினிமா செய்திகள்
1/6

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்து இருக்கும் கல்கி 2898 AD படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. படத்தின் கமல்ஹாசன் சுப்ரீம் யஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2/6

நேற்று வெளியாகி இருந்த இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லரில் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரின் குரலை AI மூலம் தத்ரூபமாக டப் செய்துள்ளனர்
3/6

வெற்றிமாறனும் சூர்யாவும் வாடிவாசல் என்ற படத்தின் மூலம் இணைந்தனர். அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியான காரணத்தால் வாடிவாசல் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4/6

அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கப் போவதாகவும், குட் நைட், லவ்வர் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
5/6

சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியோடு மீண்டும் இணையுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா,ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
6/6

அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எக்ஸ் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்டுள்ளார். தி கோட் படத்தின் பாடலா ? இல்லை வேறு படத்தின் பாடலா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
Published at : 26 Jun 2024 01:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion