Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
பராசக்தி ஆடியோ லான்சில் ரவி மோகன் பேசியது முன்னாள் ஆர்த்தியை தான் மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் என சர்சை எழுந்த நிலையில் தற்போது தற்போது ஆர்த்தி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவி பேசிய சில விஷயங்கள், ஆர்த்தியுடனான டைவர்ஸ் பிரச்னையை உணர்த்துவதாக இருந்தது என அப்போதே பேச்சுக்கள் எழுந்தன. அதாவது அவர் சுதா கொங்கரா பற்றி பேசுகையில், 'நல்ல ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் எப்படி பாதுகாப்பாக உணர்வாரோ; அதேபோல் நான் நல்ல பெண் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த ஈகோவும் இல்லை, பிரச்னையும் இல்லை' என தெரிவித்தார். அதை பார்த்த பலரும், இந்தப் பேச்சில் ஆர்த்தியையும், அவரது தாயையும் தாக்கியிருக்கிறாரோ என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் சுயமரியாதையை காப்பாற்றும் படம் இது. அதனால்தான் நடித்தேன். நானும் எனது வாழ்க்கையில் சுயமரியாதை காப்பாற்றுவதற்காக போராடினேன்... வாழ்கையில எதை இழந்தாலும் சுயமரியாதையை மட்டும் விட்ராதீங்க... என மேடையில் பேசி இருந்தார். ரவி மோகன் ஆர்த்தியை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என பேச்சி அடிப்பட்டது.
இந்நிலையில் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழ் சுயமரியாதை மற்றும் கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஆதாரமின்றி சுமத்தப்படுகின்றன. இப்படிச் சொல்பவர்கள் எப்போதும் தாங்கள் சொல்வதன்படி வாழ்வதில்லை. ஆனால், துரோகம் ஆதாரங்களுடன் வருகிறது. ஒரு மேடை என்பது நடிப்பதற்காக. நிஜ வாழ்க்கைக்கு நேர்மை தேவை. ஒருவர் மற்றவர் மீது பழிசுமத்த ஒரு மேடையைப் பயன்படுத்தும்போது, அது வெளிச்சத்தில் இருப்பவரை விட, பழிசுமத்துபவரைப் பற்றியே அதிகம் சொல்கிறது.
ஒரு நாள், அதே மேடையைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவளுக்கும் கிடைக்கும். அந்த நாள் ஒரு நடிப்பாக இருக்காது, அது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் தருணமாக இருக்கும். மேலும், அது சிலர் நினைப்பதை விட மிக அருகில் உள்ளது. அவள் நம்பிய கதாநாயகனை அவள் காதலித்திருக்கலாம், ஆனால் அவள் அறிந்துகொண்ட வில்லனிடமிருந்து அவள் தப்பிப் பிழைக்கிறாள். அவள் தனது சுயமரியாதையை அமைதியாகவும், எந்தவித நாடகத்தன்மையுமின்றியும் நிலைநிறுத்துகிறாள். இது ரவிக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகத்தான் ஆர்த்தி போடிருக்கிறார் என கமெண்ட்ஸுகளும் பறக்க ஆரம்பித்துள்ளன.





















