ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
எடப்பாடி பழனிசாமி யார் காலை பிடித்து முதலமைச்சர் ஆனார் என்ற விவரமும் தனக்கு தெரியும், இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் தங்களிடம் இருக்கும்.

ஜெயலலிதா மகள் என்று கூறி அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெயலட்சுமி என்பவரை அதிமுகவினர் விரட்டியடித்தனர். அவரின் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என கூறிக்கொள்ளும் பிரேமா என்கிற ஜெயலலட்சுமி, அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவர் , 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றார்.
இன்று அதிமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க ஜெயலட்சுமி அதிமுக அலுவலகம் வந்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் நேர்க்காணலுக்கு வந்தார். அவரது காரை அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் அதிமுகவினர் விரட்டி அனுப்பினார்கள். ஜெயலலிதாவே கையெழுத்து போட்டு தனக்கு உறுப்பினர் அட்டை கொடுத்ததாக ஜெயலட்சுமி பேட்டியளித்தார். எடப்பாடி பழனிசாமி தன்னை ஏன் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம், பெண்ணாக இருந்தும் என்னை அழைத்து பேசாமல் தன்னை ஒருமையில் பேசியதாக கூறிய ஜெயலட்சுமி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி யார் காலை பிடித்து முதலமைச்சர் ஆனார் என்ற விவரமும் தனக்கு தெரியும், இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் தங்களிடம் இருக்கு என்றும் நேரம் வரும் அதை வெளியிடுவோம் என்றும் இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கோகுல இந்திராவும் தன்னுடைய விருப்ப மனுவை வாங்காமல் தன்னை ஏன் புறக்கணித்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.





















