’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியுமா? எனக் கேள்வி எழுப்பி ஜனநாயகன் வழக்கை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்..
காலையில் யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தலைமை நீதிபதி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஜனநாயகன் ரிலீஸ் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் படக்குழு தரப்புக்கு தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பி வாயடைக்க செய்துள்ளது. ஜனநாயகன் வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9 2026 அன்று ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு இரு நாட்களுக்கு முன்பு வரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுபறி நீடித்தது. க்டந்த ஜனவரி 6 அன்று ஜனநாயகன் படக்குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு சரியான பட ரிலீஸ் தேதியான 9 அன்று காலை 10.30 க்கு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தனி நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு சிபிஎஃப்சிக்கு அறிவுறுத்தி படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினார். இதனையடுத்து படம் எப்படியும் பொங்கலுக்கு ரிலீஸாகிவிடும் என ரசிகர்கள் குஷியில் இருந்தனர்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே சென்சார் போர்டு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் 3 30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி மணீந்திர ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி அருள் முருகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் தணிக்கை வாரியத்துக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு படக்குழுவுக்கு சில சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில், சென்சார் போர்டு பதிலளிக்க கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி அவசர உத்தர பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் பட ரிலீஸ் தேதி 9 என்பதால் அவசரமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என பதிலளித்துள்ளனர். இதனை கடுமையாக கண்டித்த நீதிபதி, சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமலேயே தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்..நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியுமா? பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது பொறுமையாக காத்திருக்க வேண்டும், அதை விடுத்து நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது தலைமை நீதிபதி அமர்வு.
பின்னர் இந்த வழக்கை வரும் ஜனவரி 21க்கு ஒத்திவைத்ததோடு, விஜயின் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யுஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து அதிரடி காட்டியது நீதிமன்றம். இந்நிலையில் ஜனநாயகன் 21 ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பது விஜய் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் உள்ளனர்





















