Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
நள்ளிரவில் ப்லிங்க்ட் டெலிவரியில் எலிமருந்து ஆர்டர் செய்த பெண்ணிடம் தற்கொலை தீர்வல்ல என எடுத்துக்கூறி ஓர் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி பாயின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவில் பெண் ஒருவர் எலிக்கு விஷமாக கொடுக்கும் ஹிட் எலிமருந்துகளை பிலிங்க் இட் டெலிவரி தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அந்த ஆர்டரை டெலிவரி செய்வதற்காக வந்த டெலிவரி பாய், நள்ளிரவில் ஏன் இந்த பெண் எலிமருந்தை ஆர்டர் செய்துள்ளார் என லாவகமாக யோசித்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு போன் கால் செய்து வழியில் உங்களது ஆர்டர் மிஸ் ஆகிவிட்டது எனக்கூறி நேரத்தை போக்கியுள்ளார். இதனையடுத்து அழுகுரலில் பேசிய அந்த பெண்மணியிடம் நீங்கள் தற்கொலை செய்வதற்கா இதை வாங்குகிறீர்கள் என விசாரித்தார். அப்பெண்ணோ இல்லை என மறுத்தாலும் இவர் அன்பாக பேசி அப்பெண்ணின் முடிவை மாற்றி டெலிவரியை கேன்சல் செய்ய வைத்துள்ளார்.
இதனையடுத்து ஓர் உயிரை காப்பாற்றிய மனநிம்மதி அடைந்தததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சம்பந்தப்பட்ட டெலிவரி பாய் நடந்த சம்பவத்தை விளக்கி வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















