200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் களப்பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதற்கு ஏற்ப முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, கொளத்தூரில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக-வினரை போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று பாஜகவினரே கூறி வருவதாகவும் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளை வெற்றி பெறுவோம் என ஏற்கனவே கூறி இருந்தேன். ஆனால் திமுவினர் ஆற்றும் பணிகளை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.





















