மேலும் அறிய
Today Cinema Update: சலார்- 2ம் பாகத்தின் சூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
Today Cinema Update: சினிமா வட்டாரத்தில் நடைபெற்ற செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

தென்னிந்திய படங்கள்
1/6

ரஜினிகாந்தின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குள்ளார். படத்திற்கு கூலி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடக்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2/6

டி.ஜே. ஞானவேல் மிக தீவிரமாக இயக்கி வரும் வேட்டையன் படத்தின் ரஜினிகாந்த் உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் படத்தின் மற்ற நடிகர்களின் காட்சிகள் 18 நாட்களில் முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் டப்பிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன
3/6

தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ள படத்தின் இசை வெளியிட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடத்த உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.
4/6

எஸ் ஜே சீனு இயக்கத்தில் பிரபு தேவா தற்போது நடித்து வரும் பேட்ட ராப் படத்தில் அதிரட்டும் டம் டம் என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
5/6

சலார் படத்தின் 2 பாகத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும், படத்தின் 20 சதவீத சூட்டிங் முன்னதாக முடித்து விட்டதாக இயக்குநர் கூறியுள்ளார்
6/6

செல்வமணி செல்வராஜ் இயக்க இருக்கும் காந்தா படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்க தெரிவிக்கின்றன.
Published at : 04 Jul 2024 03:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement