மேலும் அறிய

CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!

10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்வு அட்டவணை


2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

இரட்டைப் பொதுத்தேர்வு முறை (Twin Board Exams)


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 'இரட்டைப் பொதுத்தேர்வு' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் முதல் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினாலோ, இரண்டாவது தேர்வில் பங்கேற்கலாம். இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தவிர்க்கவும். உதவும்.

பாடவாரியான மாற்றங்கள்

10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் இனி தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

  • அறிவியல்: உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
  • சமூக அறிவியல்: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பிரிவுகளாக இருக்கும். இது மதிப்பீட்டு முறையை எளிதாக்க உதவும்.

புதிய வினாத்தாள் அமைப்பு

2026ஆம் ஆண்டு தேர்வில் 50 சதவீதக் கேள்விகள் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பாடத்தைப் புரிந்து பயன்படுத்தும் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும். 20 சதவீத கேள்விகள் பலவுள் தெரிவு வினாக்களாகவும், மீதமுள்ள 30 சதவீத கேள்விகள் சிறு மற்றும் பெரு வினாக்களாகவும் அமையும். மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

வருகைப்பதிவு மற்றும் அக மதிப்பீடு


மாணவர்கள் தேர்வெழுதத் தகுதி பெற 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடுகளில் (Internal Assessment) பங்கேற்பது அவசியம். இதில் பங்கேற்காத மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் மாணவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ தெளிவுபடத் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி - போலோ கம்பேக்?
ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் SUV - போலோ கம்பேக்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Embed widget