தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
19 வயதான இளைஞர் தஞ்சாவூரில் நேற்று சாலை விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அளிக்கப்பட்ட போது மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புதானமாக வழங்கினர்.
இதனையடுத்து உயிரிழந்த இளைஞரின் இதயம், சிறுகுடல் உள்ளிட்ட உடல்பாகங்கள் தஞ்சாவூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை டி ஜி வைஷ்ணவா தனியார் கல்லூரியில் உள்ள எலிப்பாடில் தரையிரக்கப்பட்டு எம் ஜி எம் தனியார் மருத்துவமனைக்கு குறிகிய நேரத்தில் கொண்டுவரப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயதான இளைஞர் எம் ஜி எம் தனியார் மருத்துவமனையில் இதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார் . இந்தநிலையில் தஞ்சாவூர் இளைஞரின் இதயம், சிறுகுடல் உள்ளிட்ட பாகங்கள் மகாராஷ்டிரா சேர்ந்தவருக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
வடமாநில இளைஞர் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை அளித்த எம் ஜி எம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் உடல் உறுப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















