மேலும் அறிய
Tamil Cinema News : ராயன் முதல் கூலி வரை.. பொழிந்து வரும் தமிழ் சினிமா அப்டேட்ஸ்!
Tamil Cinema News : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அனைவரின் படங்கள் குறித்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ்
1/6

தனுஷின் 50-வது படமான "ராயன்" படத்தை அவரே நடித்து இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடங்காத அசுரன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
2/6

நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இது தொடர்பான ஒரு போஸ்டரும் வெளியாகி இருந்தது. தற்போது சூர்யாவின் 44வது படத்தின் சூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க போவதாக சொல்லப்படுகிறது
3/6

இயக்குநர் ஷங்கர் கமல்ஹசாசன் கூட்டணியில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ளது "இந்தியன் 2" படம். இது ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
4/6

ரஜினிகாந்தின் 171-வது படமான "கூலி" படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் டீஸர் போஸ்டர் வெளியாகி படத்தின் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. தற்போது கூலி படத்தின் சூட்டிங் வருகின்ற ஜூன் முதல் வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது
5/6

லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் "விடாமுயற்சி". கடந்த மாதம் ஸ்டண்ட் காட்சி எடுக்கும் போது விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது வருகின்ற ஜூன் மூன்றாவது வாரத்தில் மீண்டும் சூட்டிங் தொடங்க போவதாக தகவல்கள் பரவி வருகிறது
6/6

அஜித் குமாரின் 63-வது படமான "குட் பேட் அக்லி" படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நடந்து வரும் இந்தக்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 7 நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
Published at : 15 May 2024 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion